சுயமிழந்தோம்

சுயமிழந்தோம்

Apr 29, 2013

இந்த மண்ணிற் பிறந்த பெருமளவு அறிஞர்கள் இன்று
வெறும் சப்போர்ட் எஞ்சினியர்களாகவே
வாழ்ந்து சாகப் போகிறார்கள்.

ஐ.ஐ.டிக்களில் செதுக்கிப் பெற்ற அத்துனை பேரும்
ஐ.டி நிறுவனங்களில் பதுங்கிப்
பணமொன்றையே குறிக்கோளாய்ப் பெற்றார்கள்

இளம் விஞ்ஞானிகள் இலட்சம்பேர் இலட்சியங்களை
இழந்து இலட்சங்களைத் தேடி
இலாபநோக்கம் கொண்டுவிட்டார்கள்

இந்த மண் பெற்ற பெரும் சிந்தனையாளர்கள் பலர்
சித்தமெல்லாம் தமக்கு பணமயமே
என்று சிந்திக்கப் போய் சீரழிந்துவிட்டார்கள்.

எஞ்சியிருந்தோர் சிலரின் எண்ண ஓட்டங்களை இந்த
நஞ்சுகலந்திட்ட சினிமா கெடுத்துக் கொண்டாடியது.

எத்தனை எத்தனையோ விக்ரம் சாராபாய்களும்
அப்துல் கலாம்களும் சி.வி இராமன்களும்
அசோக் காட்கில்களும் வழிமாறிப் போனார்கள்.

கொள்ளை கொள்ளையாய் அறிவிழந்து சுயமிழந்து
வெள்ளையர்நாடுகளுக்கு அடிவருடியே ஆண்டுகள் கழிந்துவிட

கலையிற் சிறந்து பண்பில் உயர்ந்த பாரதப் பெருநாடு
நிலைகுலைந்து களையிழந்து கூன்விழுந்து போனதொரு கேடு

வீணைமீட்டியும் வண்ணம் தீட்டியும் கலையிற்சிறந்த கரங்கள்
வெண்ணைபோலுமொரு தொடுதிரை தடவியே விடுமுறை கழிக்கின்றன

மதமும் சாதியும் மீதமிருக்கும் மண்ணின் மைந்தர்களை
நிதமும் உயிரோடு மண்ணுக்குள் மக்கச்செய்து
சதுப்புநிலச் சேற்றுக்குள் சிக்கச் செய்துவிட்டது.

கணினி நுட்பமும் தகவல் நுட்பமும் தவிர மற்ற கல்விகள் இங்கே
செல்லாக் காசாகி தினமும் செப்பேடுகளில் எழுதப்படவுள்ளன.

இந்தியாவும் இந்தியரும் தன்னை அறியாமலே
மாற்றான் தோட்டத்துக்குள் அடிமைக் கூட்டமாய்
மாற்றுச் சிந்தனையேதுமின்றி
மண்வெட்டியோடு பயணித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

இங்கே இருக்கிற மனிதர்வயிற்றுக்கு சோற்றுக்குத் திண்டாட்டம்
அங்கே இருக்கிற நிலவுக்கு அனுப்பும் ராக்கெட் கொண்டாட்டம்
பயனிற்சிறந்ததைப் புறமொதுக்கிப் போலியாய் ஒரு முன்னேற்றம்

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வேளாண்மை நடந்த மண்ணின்று
சில ஆயிரங்களுக்காகக் கூறுகட்டிக் கூவி விற்கப்பட்டுவருகிறது!

சுயமிழந்தே வாழும் சூட்சுமம் இழந்தே
நயமிழந்தே நாணயமிழந்தே
தன்னிலை அறியும் எண்ணமே இன்றி
விண்ணிலே எரியும் விண்கல் போலே
மண்ணிலே புதையும் மக்கிய மலராய்
மடிந்தே போகிறது இந்தச் சமூகம்.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

3 பதில்கள்

 1. nanraga ullathu

 2. ve.karthik /

  உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்....
  தொடர்ந்து செய்க தமிழ் சேவையை.
  தமிழ் வாழ்க

  V.கார்த்திக்,செங்கம் வட்டம்.,திருவண்ணாமலை மாவட்டம்.

 3. jayanthy /

  இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த வீர்யம் இதுவரை குறையவே இல்லை....அண்ணா.அருமையாக உள்ளது.

rajendran-க்கு பதிலளிக்க Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>