வாழ்க்கை ஒரு பயணம்!

எங்கே போகிறோம்! என்பதைத் தெரிந்துகொள்ள எல்லோர்ருக்குமே விருப்பம்! ஆனால் தெரிந்துகொண்டபின் அதில் ஒரு சுவாரசியம் இருப்பதில்லை! சிலசமயங்களில் பொறுமை நம்மை தெய்வத்தன்மை பெறச்செய்கிறது! இந்தக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 2006

வாழ்க்கை ஒரு பயணம்!
ஆதவனைக் காலம் விழுங்கிவிழுங்கித் துப்புகிறது,
நாட்கள் மட்டும் வேகமாய் நகர்ந்துகொண்டே இருக்கின்றன!

பிறந்ததுமுதல் இந்த உடலென்னும் வாகனத்திலேறி
எங்கேயோ பயணித்தபடி மனிதம்

எங்கே போகிறதென்பதே அறியாத பயணம்!
வழியில் சில இடங்களில் சாலையோர அங்காடிகள்,
கொஞ்சம் பூங்காவனங்கள், கொஞ்சம் தரிசு நிலங்கள்!
வேறுபட்ட நறுமணங்கள், மாறுபட்ட காட்சிகள்

ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு இரசனை.

சந்தனம் சிலருக்கு விருப்பம்!
சாக்கடை சிலருக்கு விருப்பம்!

பிடிக்காதவன் வழியில் அங்கங்கு புலன்களை மூடிக்கொள்கிறான்!
பிடித்தவன் வேண்டியதை வாங்கிக் கொள்கிறான்.

சில அவசரக் குடுக்கைகள் வாகனத்தை விட்டு வெளியே குதித்துவிடுகிறார்கள்
இதைத்தான் நாம் செல்லமாய் தற்கொலை என்கிறோம்!

சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகிறார்கள்
இதைத்தான் நாம் அகால விபத்தென்கிறோம்!

முடியும்வரை பயணம் செய்பவன் பொறுமைசாலி!
அவன் தான் எல்லா காட்சிகளையும்
மணங்களையும் சுவைகளையும் உணர்ந்த ஒரு ஞானி!

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>