பாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs)

நல்லவாயன் சம்பாதித்தானாம், அதை நாறவாயன் தின்னானாம்!

இப்படி ஒருபழமொழி கிராமங்களில் உண்டு. இணையத் தேடல் தளங்களில் போய்த் தானியங்கிக் காசாளர் பொறிகளைப்பற்றித் (ATM) தேடினால் பொதுமக்களில் பலர், கருத்துக்களங்களிலும் (forums), வலைப்பூக்களிலும் (blogs)  புலம்பித்தள்ளியிருக்கிறார்கள் என்று அறியலாம். அதிலும் ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறிகளால் காசை இழந்த அப்பாவிகள்தான் அதிகமாகத் தென்படுகின்றனர். மற்ற வங்கிகளும் இந்தப் பிரச்சனைகளில் சளைத்தவர்களல்ல என்றே சொல்லலாம். ஒருவர் HDFC வங்கியின் பண அட்டையைப் (ATM Card) பயன்படுத்தி ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறியொன்றில் பணம் எடுக்க முனைந்திருக்கிறார்.

வலைஇணைப்புக் கோளாறு (Network Error) என்று செய்தி வந்திருக்கிறது. ஆனால் பணம் எடுக்கப்பட்டதாகக் கணக்கு வைத்துக்கொண்டதால் அவரின் பணம் 5000/- விழுங்கப்பட்டுவிட்டது. இதுபோல பஞ்சாப் வங்கியில் ஒருவர் பெற்றிருந்த பண அட்டையை வைத்து இந்திய அரசின் மாநில வங்கியின் (State Bank) தானியங்கிக் காசாளர் பொறியில் எடுத்தபோது அவரின் பணமும் கணக்கிலிருந்து களவாடப்பட்டது.

பொதுவாக இந்தப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல ஒரு விண்ணப்பப் படிவம் வங்கிகளிலெல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அதை நேரில் சென்று எழுதிக்கொடுத்தால் 30 நாட்கள் காத்திருக்கவைத்துவிட்டு கடைசியில் பெரும்பாலான பேருக்கு “இல்லை! நீங்கள் பணம் எடுத்திருக்கிறீர்கள்” என்றுதான் பதில் சொல்லி அனுப்புகிறார்கள் என்று அவர்கள் அந்தத் தளங்களில் தங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். பணம் எவ்வளவு இந்தப் பொறிகளில் ஏற்றப்பட்டது? பின் மீண்டும் திறக்கும்போது எவ்வளவு மிச்சமிருந்தது? என்று கணக்குப் போட்டு இந்த வங்கிகள் உங்களுடைய புகார்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால் இடையில் எங்கோ இந்தக்கோளாறுக்கும் மேல் பணம் ஏற்ற வரும் வங்கி ஊழியர்கள் அமுக்கிக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இந்திய நுகர்வோர் முறையீடு என்ற தளத்தில் இதுபோன்ற புலம்பல்களை ஏராளமாக நீங்கள் காணலாம். இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

கடன் அட்டைக்குப் (Credit Card) பணம் சொலுத்தவில்லை என்றால் குண்டர்களை அனுப்பும் இந்த வங்கிகள், நம் பணத்தைச் சுருட்டிக்கொள்கிறபோது நம்மை 30 நாட்கள், 40 நாட்கள் என காத்திருக்கச் செய்வது இந்திய சட்டத்தின் ஏட்டின் கேவலமான பக்கங்கள்.

சென்ற சிலவாரங்களுக்கு முன் Indian Reserve வங்கி 12 நாட்களில் பணத்தைத் திருப்பித்தரவேண்டும் இல்லையென்றால் வட்டியோடு சேர்த்து தண்டத்தொகையினையும் தனது வாடிக்கையாளருக்குத் தரவேண்டும் எனக் கடுமையாகச் சட்டம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. எங்கே தனிமனிதன் மாட்டிக்கொண்டாலும் அவனை அலைக்கழித்து அலங்கோலப் படுத்தும் சட்டம், நிறுவனங்களையும் வங்கிகளையும் கண்டுகொள்வதே இல்லை. பெயருக்குத்தான் இவை சட்டங்கள் ஆனால் பாதிப்பென்னவோ பொதுமக்களுக்குத்தான்.

எது எப்படியோ நீங்கள் கொஞ்சம் சிலிர்ப்பாகவே இருங்கள். பின்வருவனவற்றை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள்,

  1. எப்போது மொத்தமாக ஒரு தொகையைத் தானியங்கிக் காசாளர் பொறிகளில் (ATM)  எடுக்காதீர்கள். அப்படி எடுக்க வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக நான்கைந்து தடவைகள் பிரித்து எடுங்கள்.
  2. முடிந்தவரை ICICI, SBI காசாளர் பொறிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் ஏனெனில் அவைகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் வலிப்பின்னல் அளவு (Network Size) அதிகம்.
  3. காசு தர முதல் முறை காசாளர் பொறிகள் (ATM) மறுத்துவிட்டால் மீண்டும் இரண்டாவதாக முயற்சிக்க வேண்டாம்.
  4. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அந்த காசாளர் பொறி (ATM) எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள். பின் அதன் வங்கியிலும் உங்கள் வங்கியிலும் புகார் கொடுத்து ஒப்பம் பெற்றுக்கொள்ளுங்கள்.
  5. பணம் எடுத்தாலும் குறைந்தது இரண்டுமாதங்கள் அதற்கான குறுந்தகவல் (SMS) மற்றும் குறிப்புத்தாள் (Advise Slip) ஆகியவற்றை அழிக்காமல் வைத்திருங்கள்.
  6. வங்கிகளில் உங்கள் விண்ணப்பத்துடன் அந்தத் தாளின் நகலை (Photo Copy) இணைத்துக் கொடுக்கவும். மூலத்தை (Original) நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
  7. பணத்தினைத் திரும்பப் பெறும்வரை ஓயாதீர்கள். எங்கெல்லாம் முறையிட முடியுமோ அங்கெல்லாம் முறையீடு செய்யுங்கள்.
  8. எல்லாவற்றுக்கும் மேல் பணம் எடுக்கும் முன், இருப்புக்கணக்கினைச் சரிபார்க்கும் குறிப்புத்தாளினைப் பெற்றுக்கொள்ளவும் (Balance slip). பின்னர் உங்கள் பண அட்டை பிரச்சனைக்குள்ளாகிவிட்டால் மீண்டும் இருப்புக்கணக்கினைச் சரிபார்க்கும் தாளினைப் பெறவும். இந்த ஒன்று போதும் உங்கள் பணத்துக்குக் காவலாக. பணமே எடுக்காத போது பணம் குறைந்ததாகச் தகவல் தாள் வந்தால் முன்னர் எடுத்த தகவல் தாளுக்கும் இந்தத் தாளுக்குமுள்ள வித்தியாசப் பணத்தை நீங்கள் சான்றாகக் காட்டலாம்.
The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>