முக்கோண உணவு முறையும் வாழ்வின்பமும்

கெம்பா மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் கார்த்திகேயனின் அறிமுகம் கிடைத்தது எனக்கு. இரண்டு நாட்கள் எங்கள் சகாக்களுடன் பயிற்சி எடுத்துக்கொண்டேன். மனவியலில் இருந்து உடலியல் வரை டாக்டர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். நிறைய எதார்த்தமான எடுத்துக்காட்டுக்களை நமது வாழ்வில் இருந்து பயன்படுத்தினார். அவற்றில் இருந்து சிலவற்றை நான் நமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

பயிற்சியின்போது எல்லோராலும் இளங்காலை நேரத்தில் எழுந்து பயில்களத்துக்கு வரமுடியுமா? இந்தக் கேள்வி எங்கள் சகாக்களின் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த எண்ணம்தான் குடிகொண்டிருந்தது. கேரளக் கடற்கரைப் பகுதியில் அலைகளின் ஆர்ப்பரிப்பின் நடுவே பயிற்சி துவங்கியது. அடிப்படை உடற்பயிற்சி கொடுக்கப்பட்டது. கை, கால் உடல் மட்டுமல்லாது கண்களுக்கும் சில பயிற்சிகள் கற்றுக்கொண்டோம். நாள்முழுக்க அந்தப் பயிற்சியின் புத்துணர்வு உடலெங்கும் ஆர்ப்பரிக்கத்தான் செய்தது.

ஒருசில விளையாட்டுப் பயிற்சிகளும் நடந்தது. அதிலும் சோர்வானது, நின்று வேடிக்கை பார்த்ததே ஒழிய எங்களிடம் எட்டிப்பார்த்து நானும் விளையாட வருகிறேன் என்று சொல்லவேயில்லை.

நடுவே ஓய்வுக்கும் நேரம் வகுக்கப்பட்டது. கலந்துரையாடல்கள், மற்றும் முனைவரின் உரையின் போதெல்லாம் எங்களுக்குள்ளேயும் அறிமுகமற்ற சகாக்களையும் ஒருங்கிணைக்க முனைவர் வேறுவேறு இடங்களில் மாற்றி மாற்றி அமரவைத்தார். அலுவலகத்தில் அனைவரும் இதுவரை அமர்ந்திராத பழகியிராத குழுமங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர். அதுவே ஒரு புதிய புரிந்துணர்வாக அமைந்தது.

முனைவரின் பேச்சில் உணவுப்பழக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. நம்மிடம் குப்பையாகக் குவிந்துபோன மோசமான உணவுமுறைகளை நறுக்கித் தெறித்தாற்போல சொல்லிவிளங்கவைத்தார் முனைவர் கார்த்திகேயன். முக்கியமாக கீழ்நோக்கிய முக்கோண உணவுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் சொன்னவிதமல்ல. கிட்டத்தட்ட ஒருமாதமாக அவர் சொன்னமுறைப்படி உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்து வெற்றிகண்டு வருகிறேன். மிகவும் வியப்பாக இருக்கிறது. என் வாழ்வில் அது இவ்வளவு மகிழ்ச்சியைத் தருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சமீபத்தில் தான் அவள் விகடனில் அவரின் கட்டுரைகளைப் பார்த்தேன். மிகவும் பயனுள்ள கருத்துக்களை அள்ளித்தரும் இவரின் பயணம் வெற்றிபெற மனம் வாழ்த்துகிறது.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>