| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
சிட்டுக்குருவிகள் நமது நாட்டில் ஆங்காங்கு உலவுவது குறைந்துவிட்டதை நம்மால் உணர முடிந்ததும் நமது அறிவியலாளர்கள் பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். அதில் முக்கியமானதாக செல்லிடப்பேசி அலைக்கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு (Mobile Tower Signal Radiation) என்று நாம் நினைத்திருந்தோம்.
ஆனால் நியூயார்க் நகரத் தெருக்களில் என்னால் ஒரு உண்மையைக் காண முடிந்தது. எப்பொழுதுமே மக்கள் நெருங்கிக் காணப்படும் அங்கு அளவில்லாத சிட்டுக் குருவிகளைக் காணமுடிந்தது. அச்சமின்றி அவைகள் மனிதர்களிடத்தில் நெருங்கி வந்து அவர்கள் உண்ணும் உணவில் பங்கு கேட்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பல்வேறு அலைவரிசைகள், தொழில்நுட்பக் கருவிகள் கழுத்தை நெறிக்கும் பெருநகரத்திலேயே சிட்டுக்குருவிகள் பொங்கிப் பெருக்கிடக்கையில் செல்லிடப்பேசி கதிர்வீச்சுக்களால் அவை நம் நாட்டில் அழிந்துபோனதாக நாம் எண்ணிக்கொண்டிருப்பது முற்றிலும் தவறான ஒன்றுதான்.
வேறென்ன காரணமென்று பல்வேறு எண்ணங்கள் மேலோங்குவதில் உலகவெப்பமயமாதல் ஒரு காரணமாக கண்டிப்பாக இருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு அறிவியலாளர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் இல்லை யாரிடமாவது கேட்டுச்சொல்லுங்கள்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010 04:11)