மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
நான் இந்தப் பதிவில் ஏதும் சொல்லப்போவதில்லை. தினமலரில் 24 செப்டம்பரில் வெளிவந்த இருவேறு செய்திகளை மட்டும் பதிவிடுகிறேன். படிக்கும் உங்கள் மனக்கருத்துக்களை பதிலிடுங்கள். ஒன்று மட்டும் சொல்லவேண்டுமென்று தோன்றுகிறது, இதுவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் கையூட்டு (லஞ்சம்) தான்.
செய்தி 1:
திருக்கோவிலூர் : சிம்பில் ஏர்கிராப்ட், நேவிகேஷன் கார், கம்ப்ரஷர் ரோபோ என பல்வேறு சாதனங்களை உருவாக்கி பெரிய விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற கனவுடன் ஏழை மாணவர் பாலாஜி, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்காம் ஆண்டு படிப்புக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகிறார்.
செய்தி 2:
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வு : ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு கூடுதல் செலவு. இதேபோல, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கான சிறப்புப் படியும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைக்காமலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு, "லக்' அடித்துள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2010 08:37)
இதுலயும் ரெண்டு மாங்காவுக்கு குறிவெச்சுத்தான் இத்தனை நாளா காலத்த ஓட்டிபுட்டாருங்க. வாத்தியாருக்கு சும்மாவா போட்டுக் கொடுக்கறாரு.
முதல் மாங்கா, ஓட்டுச்சாவடியிலே வேலைக்கு வர்ரது வாத்தியாருங்கதான். அப்படியே கள்ள ஓட்டுக் குத்தித்தள்ள உதவியா இருப்பாங்க இல்ல. பி. எட்.ல கள்ள ஓட்டுப்போடச் சொல்லித்தர பாடம் ஒண்ணு வெச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல.
ரெண்டாவது மாங்கா, இளைய சமுதாயத்துக்கு இவரைப் பத்தி நல்லது சொல்லி வருங்கால சமுதாயத்தில் கணிசமான கூட்டத்தை இவரு கட்சியிலே சேத்து உட்டுருவாங்க. எங்க வாத்தியாரு இவரப் பத்தி ஆஹா ஓஹோன்னு அப்பப்ப பாடத்துக்கு இடையிலே சொல்றதை நானே கேட்டிருக்கேன்.
நம்ம மக்களும் முட்டாப்பயல்களாவே வளர்ந்துட்டாங்க... ம்ம்ம்ம் .......என்ன சொல்றது. பாலாஜி மாதிரி பசங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல!