மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எல்லோராலும் அதிகமாகப் பயன் படுத்தப்படும் இ-கலப்பை எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது அது கூகுள் மூலம் கிடைக்கிறது. இங்கே சொடுக்கி விவரத்தை அறிந்து கொள்ளவும்.
திங்கட்கிழமை, 16 ஆகச்டு 2010 14:27 | ஆசிரியர்: கணேஷ் குமார் |
நேற்று மறைந்தது விடுதலை நாள் அழிவுக்குப்பின் இருபது ஆண்டுகளில் ஜப்பான் வளர்ந்த தொழில்வளர்ச்சியை விடுதலைக்குப்பின் அறுபது ஆண்டுகளில் அடைந்திருக்கிறது நம் நாடுபடிக்கவியலாத மாணவர்க்கு சொல்லிக் கொடுக்க 'அகரம்' அமைப்பு தோன்றியிருப்பதும், அதில் தொழில்துறை மற்றும் மென்பொருள்துறை வல்லுநர்கள் பலர் இணைந்திருப்பதும் நம்மில் பலருக்கும் இன்பந்தரும் செய்தி!
முதல் முறையாக சுயவிளம்பரமின்றி ஒரு நடிகன் நம் நாட்டவரை நிமிர்ந்து பார்க்கிறார்.... அவர் பார்வைக்குத் தலைவணங்குவோம்....!
இவ்வளவு நாளாக நம்மை ஆண்ட அரசியலாளர்கள் செய்யாததை இந்த அகரம் செய்துமுடிக்கட்டும். நம்மால் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட முடிந்தால் அதுவே ஒரு பெரும் பேறுதான். நம் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நாளைய அப்துல் கலாம்கள், நாளைய அண்ணாதுரைகள், நாளைய சமூகத்தின் துரு ஏறாத தூண்கள் தூங்கிப் போகாமல் தட்டி எழுப்புவது என்னவோ நமது கடமையாக நமக்குத்தோன்றுகிறது.