| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
காசை வாங்கிக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினால்கூட இந்த தணிக்கைக் குழுவும் அதற்குத் துணைநிற்பவர்களும் படத்திற்கு சான்றளித்து படம்பார்க்க அனுமதிப்பார்கள் என்று தெரியும் தற்போது வெளிவந்திருக்கும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படத்தைப் பார்ப்பவர்க்கு. அத்தனையும் வக்கிரம். வக்கிரத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனலாம். செல்வராகவன் என்ற இயக்குனருக்கு, இதற்காகத் தூக்கு தண்டனை அளித்தாலும் அதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
திரைப்படம் முழுக்க வெட்டு, தலை உருளுதல், உதிரம், கொடுமை, வக்கிரம், ஆபாசம் என்று என்னவேண்டுமானாலும் சொல்லலாம். பார்க்கச் சகிக்கவில்லை, காதுகளைப் பொத்திக்கொண்டு ஓடிவந்துவிட வேண்டுமளவு கண்டபடி ஒலி, பின்னணி இசை.
கதையில் வரும் பாத்திரங்கள் ஆண் பெண் என்று பாகுபாடின்றி மது அருந்தி மாமிசம் சாப்பிடுவதாகக் காட்டி சோழ பாண்டியர்களை சேற்றுச்சகதிக்குள் தள்ளிவிட்டு சோழன் பயணம் தொடரும் என்றுவேறு சொல்லியிருக்கிறான். தமிழனத்தின் தலைவன் என்று தன்னைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிற கட்சித்தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தைப் பார்ப்பவர்கள் உண்மைத் தமிழனாயிருக்கும் பட்சத்தில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டுமென்று எண்ணுவது திண்ணம். இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களிலேயே அசிங்கத்தின் உச்சி என்று எண்ண விழைகிறோம்.
தமிழக மக்கள் கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 18 சனவரி 2010 08:30)