| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
பாலிதீன் பைகள் என்றழைக்கப்படும் மழைக்காகிதங்கள், அதனால் புவிமாசுபடுதல் மற்றும் பல கொடுமையான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாள்தோறும் கோடிக்கணக்கில் பல பாலித்தீன் பைகள் சாலையிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் வீசி எறியப்பட்டு அதன் மூலம் புவியானது கண்டபடி மாசுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. பாலிதீன் பைகளுக்கான அரசின் சட்டங்கள், கெடுபிடிகளும் அதனுடன் சேர்ந்து காற்றில் பறக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.

டேனியல் பர்டின் உத்தி மிகவும் எளிமையானது; ஆயிரம் ஆண்டுகளானாலும் பிளாஸ்டிக் உறுதியாக மக்கிப்போகிறது என்பது உண்மையானால் அதனை நுண்ணுயிரினங்கள் உண்ணுவது உண்மையாகத்தான் இருக்கமுடியும். நாட்கள்தான் அதிகம் தேவைப்படுகின்றன. எந்தெந்த சூழ்நிலையில் அவைகளின் வளர்ச்சியும், உண்ணும் திறன் அதிகரிப்பும் இருக்கிறதோ அந்த நிலையினைத் தெரிந்து, அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் வேகமாக அந்த நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கை உண்டு மக்கச் செய்யும் என்பதுதான் அந்த உத்தி.
இந்த உத்தியினை அடிப்படையாகக் கொண்டு பிளாஸ்டிக் பைகளைப் பொடியாக்கி நிலத்தில் போட்டு அதனுடன் ஈஸ்டு, சில வேதிப்பொருட்கள் மற்றும் குழாய்நீர் ஆகியவற்றைக் கலந்துவைத்து நுண்ணுயிர் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து அவை வேகமாக மக்கிப்போகின்றன என்று உறுதிப் படுத்தியிருக்கிறான் அந்தச் சிறுவன். 37 டிகிரி வெப்பநிலையில் 43 விழுக்காடு பிளாஸ்டிக் மாதிரிகளை 6 மாதத்தில் தின்று தீர்த்தன அவன் ஊக்குவித்த நுண்ணுயிரிகள்.
மேலும் ஆராய்ச்சியைத் தொடர அவனுக்கு பணமும் ஊக்கமும் அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அவனைச் சார்ந்து இயங்கவிருக்கும் குழுவினர் பிளாஸ்டிக் பைகளை அழிக்கும் முறையினைக் கண்டறிவார்கள் என்று நம்பலாம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 28 திசம்பர் 2009 11:21)