| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
இது தினமலர் செய்தி : http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14703
இதுமட்டுமல்ல இன்னும் பல சாமியார்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் இங்கே. அவர்களில் பலர் சாமியார் ஆனதே இதற்குத்தான். இவர்களை நம்பி ஏமாறும் அறிவற்ற மனிதர்கள் இங்கு நிறைய இருப்பதால் இவர்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரே விடைதான் உண்டு. இந்த விடை இப்போது யாராலும் கண்டுபிடிக்கப் படவில்லை. இது 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் திருமூலரால் சொல்லப்பட்டது.
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழிவீழுமாறே
நம்மில் பலரும் அப்படித்தான் இறைவனை வணங்க இயற்கைக்கு முரண்பட்டு, சாமியார்கள் எனும் போர்வையில் இயங்கும் சமூகக் குற்றவாளிகளை அண்டி வாழ்வைக் கெடுத்துக்கொள்கிறார்கள். நாள்தோறும் இப்படிப்பலர் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணமிருந்தாலும் மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வது?