| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
மேலைநாட்டத் தொழில் நுட்பத்தில் நாகரீகத்தைக் கலப்படம் செய்துவிற்கும் தந்திரத்தை தனியே எதிர்க்கிறேன் குரல் கொடுக்க வாரீரோ…
இது பழமைவாதியின் கூச்சலல்ல; ஒரு கலாச்சாரப் பற்றுடையவனின் பாய்ச்சல்!
பழமைகள் பஞ்சாங்கங்களல்ல… அவை
பதியப்பட்ட பத்திரங்கள்
பண்பாட்டைப் பாங்குடனே
பாதுகாக்க வரைந்திட்ட சித்திரங்கள்
புதுமை எனும் உரு கொண்டு
பொதுவாக வளர்கிறது தொழில்நுட்பம்
பங்கம் ஏதும் இருந்திட வாய்ப்பில்லை
தங்கம் என்றும் தரத்தில் குறைவதில்லை
காதணியா யிருந்தாலென்ன காலணி யாயிருந்தாலென்ன
மீன்வாங்கியதில் தவறில்லை! மீன்கூடையுமா வாங்க வேண்டும்?
ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?
மேலைத் தொழில்நுட்பம் கட்டிய சேலையுடன் வரட்டும்
வாழ்வளித்து வாழ்ந்திடுவோம்.
நாகரீக ஆபரணம் வரதட்சணையாய் வர வேண்டாம்
பின் இருக்கிற முத்துமாலைகளை செத்தா போகச் சொல்கிறாய்?
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகினி
ஜெர்மனி