நானும் இதைப்பற்றி யோசித்திருக்கிறேன். இவர்களைத் திருத்தவழியே இல்லை என்பதாகத்தான் தோன்றுகிறது.
| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…
இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்
கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…
இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..
உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….
புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!
இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!