| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
காதல் கவிதைகள் அதிகம் எனக்கு கைகளில் கனிந்ததில்லை.
பல நண்பர்கள் சொன்னார்கள், அதனால்தான் உன் கவிதையை யாரும் இரசிப்பதில்லை என்று…
நான் ஒப்புக்கொள்ளவில்லை. வாதங்களின் முடிவுகள் என் நண்பர்களுக்கோ எனக்கோ கிடைக்கவில்லை.
ஆனால் எனக்குள் ஒருசின்ன மனவாசை… காதல் கவிதை எழுதிப்பார்த்தால் என்னவென்று….
உன் விழியில் வழிகின்ற காதல் – அதை
உணராமல் இருப்பதுதான் உண்மையிலே சாதல்
சுகி என்று சொல்லும் உன் செந்தமிழின் பேச்சு
சகியென்று சொல்லும் என் வார்த்தைதான் மூச்சு
மதிமயக்கம் கொள்ள சதிசெய்யும் பெண்ணே – என்
விதி என்னைக் கொஞ்சம் வதைக்குதடி கண்ணே;
கதியென்று உன்னைக் கொண்டாட மனமும்
குதியென்று குதியாய் குதிக்குதடி பெண்ணே!
செல்வாக்கு உண்டு
சொல்வாக்கும் உண்டு
வயிறாற உண்டு- பின்
உறங்க இடம் உண்டு
உனதழகு கண்டு
வருணனைகள் கொண்டு
சீராட்ட என்று எனக்கு சொற்ப நேரம் உண்டு
வளர்ந்துவரும் நாகரீகம் – அதனால்
ஒழிந்துவிடும் மாந்திரீகம்
பின்னெந்த முறையில் எனை வசியம் செய்வாய்
உன் திட்டம்தான் என்ன மலர்ந்திடு உன் செவ்வாய்…
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 07 சூலை 2009 15:19)