| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
- நிலா
தேய்ந்து வளர்வதற்காக
தேம்பி அழுவதில்லை!
வளர்வதற்கும், தேய்வதற்கும்
வகுக்கப்பட்ட கதைகளை
அது நினைத்துக்கூட பார்ப்பதில்லை!
- வானச்சூரியன்
மேகம் மறைத்ததற்காக
வருத்தமா படுகிறது
மறுகணமே வருவதில்லை!
- உலகம்
ஒருவரையும் ஒதுக்குவதில்லை!
உள்ளம்தான்
தவறுதலாய்
தப்புக் கணக்குப் போடுகிறது!
- பூமி
பிரகாசிப்பவர்களையும்,
பின்வாங்குபவர்களையும்
அங்கீகரிக்க
ஒரு சேரவே
கைநீட்டிக் காத்திருக்கிறது!
பவுர்ணமி நிலாக்களை மட்டுமா...
அமாவாசைகளையும் தானே
ஆழ்கடல்கள்
அலைக்கரம் நீட்டி
அழைக்கின்றன!
குதியடிகளில் மிதிபட்டும்
வாமன மரங்களாம்
புற்கள்
குரூரத்தோடு
கூடி வளரவில்லை!
நறுக்கப்படும்
நகங்கள் தானே
இரட்டிப்பு வேகத்தோடு
எட்டிப் பார்க்கின்றன!
காகம் துரத்தியும்
குயில்-
இனவிருத்திக்கு
இடத்தை
மாற்றியா கொள்கிறது!
தூக்கணாங்குருவி
துளி ஒளி சிந்தும்
மின்மினியை
கூட்டில் வைத்துக்
குஞ்சுகளுக்கு நம்பிக்கை
கொடுப்பதில்லை!
சேர்க்கப்படும்
ஒருதுளி மோர்
பாத்திரப்பால் முழுமையையும்
தயிராக்கித் தருவதில்லையா ?!
- வாய்ப்பு
ஒரு துளி-
அதை நழுவ விடாது
சமுத்திரமாக்கும்
சாமர்த்தியசாலிகளே
சாதனையாளர்களாகின்றனர்!
சுந்தரமூர்த்தி . B
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 19 ஆகச்டு 2009 15:24)