பயிர்களை மேயும் வேலிகள்!

பயிர்களை மேயும் வேலிகள்!

Jun 29, 2012

ஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா? ஆசு என்றால் குற்றம்/குறை, இரியர் என்றால் நீக்குபவர். ஆக ஆசிரியர் என்றால் குற்றங் குறைகளை நீக்கி ஒளிவிளக்கை ஏற்றுபவரே ஆசிரியர்.

பண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கல்விமுறையால் நமது வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கும் கல்வி, சென்ற தலைமுறையிலேயே ஒழிந்து போய்விட்டது என்பதைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்துக்கும் முன்னமே வேத வாக்கியங்களில் இடம்பெற்ற இந்த குரு எனப்படும் ஆசிரியரே மாணவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைக்கு இந்தப் பண்பாடு சீரழிந்து சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருக்கிறது. காவலுக்கு வந்த வேலிகளே பயிர்களை மேயும் கதைதான் இது.

செய்தி: தினமலர்


செல்லாக்காசாகும் இந்தப் பண்பில்லாத கல்விக்காகத்தான் லட்சங்களும் கோடிகளும் கொட்டிக்கொடுத்து இக்காலப் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்களா? முன்பெல்லாம் பள்ளிக்கு படிக்க வாருங்கள் என விழிப்புணர்வூட்டி சமூகமாற்றம் ஏற்படுத்த அரசு பெருஞ்செலவு செய்து ஓரளவு கல்வியின் இன்றியமையாத்தன்மையை நம்நாட்டினர் உணர ஆரம்பித்திருக்கும் இவ்வேளை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் கல்விமேலிருக்கும் நம்பிக்கையை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

பாலினம், இனப்பெருக்கம், உடலியல் பற்றியவிளக்கங்கள் கொண்ட ஒரு கட்டாயப்பாடத்தை நமதரசு குழந்தைப்பருவத்திலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியாக சிறார்களுக்கு வைக்க வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தி எல்லோரும் போராடியாகவேண்டிய கட்டாயநேரத்தில் இருக்கிறோம்…..

அரசாங்கம் செய்யவில்லையென்றால், விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் பங்கெடுத்து கல்விச்சாலைகள் தோறும் சென்று நாமாகப் பாடம் புகட்டவேண்டியிருக்கும், அது எந்தளவு வழக்கப்படும் என்று தெரியவில்லை!…

நமது சமூகத்தின் இந்த அவல நிலையொழிக்க உண்மையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றும் தெரியவில்லை!….

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

ஒரு பதில்

  1. Arumugam Ramasamy /

    இக்கால ஆசிரியர்களோ அவர் சார்ந்த அமைப்புகளோ என்றாவது மாணவர் மீதும் அவர்கள் கல்வித்தரம் மீதும் அக்கறை காட்டி அதனை மேம்படுத்தும் நோக்கோடு போராடியதுண்டா...?

    ஆசிரியர்கள் என்று தம் பணி ஒரு சேவை என்பதை மறந்து / துறந்து வீதியில் பஞ்சப்ப்டிக்கும் பயணப்படிக்கும் போராட் முனைந்தார்களோ அன்றே அதன் அர்த்தம் மாறியது..!

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>