| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
பழையன
பல்லடம், காங்கேயம், தாராபுரம், செம்பட்டி... மதுரை.... பேருந்து நிலையத்தில் புறப்பட இருக்கும் பேருந்து, இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்தாலும் நடத்துனர் கூவுவதைக் கேட்டிருப்போம். படிகளில் பயணம் செய்ய நம் கல்லூரி மாணவர்களுக்கு அப்படி ஒரு ஆர்வமிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் பெங்களூரு, பூனே, மும்பை என்று புறப்படவிருக்கும் விமானத்தில் விமான ஓட்டிகள் கூவி ஆள் பிடித்தால் எப்படியிருக்கும். ஆனால் இந்தக் கூத்து இந்தியாவில் அரங்கேறியாகிவிட்டது. ஏர் இந்தியா எனப்படும் இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனம் இருக்கைகள் எண்ணிக்கைக்கும் அதிகமாக மூன்று பேரை ஏற்றிச்சென்று A321 என்ற மங்களூரு விமானத்தை விமானப் பாலத்தின்மீது மோதவிட்டிருக்கிறது.
இது பற்றிய முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் விமான ஓட்டியின் அருகிலிருந்த ஒரு குதியிருக்கையில் ஒரு பெண்மணியும் பழுதுபார்க்கும் போது அமரும் மடக்கு இருக்கையில் இரு குழந்தைகளும் அமர்ந்து போயிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
மக்களின் நலனில் எவ்வளவு அக்கரை இவர்களுக்கு என்று நாம் அறியாத செய்தியா என்ன? இந்திய அரசியலில் இதெல்லாம் சாதாரணந்தான். எல்லாம் "ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு" என்ற கதைதான்.
பார்க்க: யாகூ செய்திகள்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 17 சூலை 2009 10:33)