தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
பழையன
கூகுள் புவி வரைபடங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தளங்கள், புவியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவிவரைபடங்களைத் தனியாக உருவாக்க முடியாமல்/உருவாக்காமல் கூகுளின் வரைபடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் முக்கியமானதாகக் கூறப்படுவது விக்கிமேப்பியா (www.wikimapia.org) என்ற கட்டற்ற(Open Source) கலைக்களஞ்சியம் ஆகும்.
அந்தளவுக்கு கூகுளின் வரைபடங்கள் பிரபலம். மேலும் முப்பரிமாண வீதி வரைபடங்களையும் வெளியிட்டு மிகப் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது கூகுள்.
வீதிகள் உள்ளிட்ட முப்பரிமாண உண்மை வரைபடங்களை மனிதர்கள் வீதிகளில் நடந்தால் பார்க்கும் கோணத்திலேயே உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடுக்கு அடுக்காக அசைபட க் கருவிகளைக் கொண்டு வாகனங்களை முக்கிய வீதிகளில் வலம்வர வைத்து அதன் மூலம் நேரடிக் காட்சிகளைப் படமாக்கி அவற்றில் தேவையான செய்திகளை ஏற்றி, பார்ப்பவர்களுக்கு தாமே அவ்விடங்களுக்குச் சென்று வலம்வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி அவர்கள் திரும்பும் வீதிகளைக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டை உண்மையைக் கிரமப்படுத்துதல்(Indexing reality) என்று அழைக்கிறார்கள் இவர்கள். தற்போதுஎர்த்மைன் என்ற தளத்தில் சென்று இதுபற்றி முழுமையாகக் காணுங்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 17 சூலை 2009 10:41)