very nice
| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
வாழை போல இதன் மரப்பட்டை, வேர்ப்பட்டை, பழத்தோல், பூ, பிஞ்சு, பழம் மற்றும் இலை என இதன் அனைத்துப்பாகங்களும் மருத்துவப் பயனுடையது.
மாதுளையில் இனிப்புச்சுவை, புளிப்புச்சுவை என இருவகைகள் உண்டு. இனிப்புவகை அன்றாட சாப்பிடவும், புளிப்பு மாதுளை மருத்துவப்பயன்பாட்டுக்கும் சிறப்பானவை.பொதுவாக மாதுளையில் துவர்ப்பு மிகுந்திருப்பதால், குருதி (இரத்தம்) விருத்தியாகும். உடல் இறுக்கம் பெறும். குடல் வலிமை பெறும். சூட்டினாலும், கிருமிகளாலும் ஏற்படும் பல்வேறு கழிச்சல்களைக் கட்டுப்படுத்தும். உடல் குளிரும்.
வெடித்துவீழ் பழத்தை வாங்கி
மெல்லிய சீலைகட்டி கடுக்கெனப் பிழிந்து கொண்டு
கண்டுசர்க் கரையும் குடித்திட வெப்பு மாறும்
குளிர்ந்திடும் அங்கமெல்லாம் வடித்தநன் மொழியினாளே
மாதுளம் பழத்தின் சாறே.
மாதுளை, தூதுளை, வளர்ந்த வீட்டில்
வயிற்றிலும் நெஞ்சிலும் குற்றமில்லை
ண்டிகளில் அடிக்கடி பயணிப்பவர்கள், இரும்பைத் தொட்டு வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் அழகும் பொலிவும் பெறும்.இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 15 ஆகச்டு 2009 09:06)