தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (1) - வாழவைக்கும் வாழை
கோவில் திருவிழாக்கள், வீடுகளில் நிகழும் நல்விருந்துகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் திறப்புநாட்கள் மேலும் அனைத்து நல்ல நிகழ்வுகளிலெல்லாம் வாயில்களில் மலர் மற்றும் குலையுடன் கூடிய வாழைமரத்தினைக் கட்டுவது நமது நாட்டின் மரபாகக் கருதப்படுகிறது. அதைக்கடந்து உட்சென்றால் முதலில் தட்டுக்களில் நம்மை வரவேற்பதும் வாழைப்பழமே. விருந்தில் பரிமாறப்படுவதும் வாழைப்பழமே.
இது பழங்களின் அரசி எனச்சிறப்பிக்கப்படுகிறது. குழந்தைகளையும், உறவினர்களையும் மற்றும் உடல்நலக்குறைபாடுடையோரைப் பார்க்கச் செல்பவர்கள் வாங்கிச்செல்லும் பொருட்களில் வாழைப்பழம் தவறாது இடம்பெறுகிறது. புதுமணத்தம்பதியரை முதல்நாளில் பாலும் வாழைப்பழமும் கொடுத்து இனிமையாக இருத்த வாழ்த்துவது தமிழர் மரபு. வாழ்த்தும்போதும் "வாழையடி வாழையாக" எனக்கூறுவதையும் கண்டிருப்பீர்கள். வாழை அழிவினைச்சந்திக்காத ஒருமரம். ஒரு வாழை மரம்
மட்டும் உங்கள் இல்லத்தில் வைத்துவிட்டால் போதும் அது காலம் காலமாக தன் சந்ததிகளை வளரவிட்டுத்தான் செல்லும். மற்ற பழங்கள் அதற்கான காலப்பருவங்களில்தான் கிடைக்கும், ஆனால் வாழைப்பழமோ ஆண்டுமுழுவதும் கிடைக்கும் ஒரு சிறப்பான பழவகையாகும்.
நேந்திரன் வாழை
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 09 ஆகச்டு 2009 19:36)
நன்றிகள்