தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
சித்த மருத்துவத்தை ஓர் உயிருள்ள மருத்துவம் என்று கூறமுடியும். பெரும்பாலும் அரிய மூலிகைகளின் உதவியுடனே சித்த மருத்துவ மருந்துகள் ஆக்கப்படுகின்றன. மனிதர்களில் ஞானிகள் எப்படி பிறரின் மனக்குறைகளை நீக்க உதவுகிறார்களோ அதுபோலவே தாவரங்கள் வகை உயிரினங்கள் பிற உயிரிகளின் உடற்கோளாறுகளை நீக்க உதவுகின்றன.
நம் நாடு எப்படி சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறதோ அதுபோலவே, பல அரிய மூலிகைகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. அதனால்தான் சித்தர்களுக்கும் மூலிகைகளுக்கும் அவ்வளவு இணக்கமான உறவுள்ளது. அத்தகைய வியத்தகு மூலிகைகளைப் பற்றித்தான் பனித்துளிகள் தளத்தில் இந்த நெடுந்தொடர் வெளிவருகிறது. பிருங்கராஜா என்றும் தேகராஜா என்றும் வடமொழிச்சொற்களால் சித்தர்கள் கரிசலாங்கண்ணியை அழைத்தார்கள். உண்மையில் இது மூலிகைகளின் மன்னன் தான். இது கரிசாலை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அண்மையில் நமது தமிழ்மண்ணில் உதித்த அருட்பிரகாச வள்ளல் பெருமான், முதல் நிலையில் வைத்துப் பாராட்டியுள்ள ஒரு மிகச்சிறப்பான மூலிகைதான் கரிசாலை.
கரிசாலையைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ நாள்தோறும் உட்கொள்பவர்களது உடல் நலம்மிகுந்து வாழ்நாட்களை நீட்டிக்கவல்லது. முதன்மை உள்ளுடம்பாகிய சூக்குமதேகம் வலுப்பெற்று உடல் அழியாநிலை பெறும். முகம் பொலிவு பெறும்.
கரிசாலையைப் பச்சையாக மென்று பல்துலக்கி அந்த சாற்றைப் பெருவிரலால் தொட்டு மேலண்ணத்திலுள்ள மூச்சுப்பாதையில் சுழற்றினால் பித்தநீர், கபநீர் வெளியேறி அந்தப் பாதை தூய்மையடைகிறது. இதனால் எளிதாக மூச்சுவிடும் திறன்பெறும்.
கண் ஒளி சிறக்கும். வெள்ளைப்பூ பூக்கும் இந்தக் கரிசாலை கிடைக்காதபோது மஞ்சள் பூப்பூக்கும் பொற்றலைக் கையாந்தகரை என்னும் மஞ்சள்க் கரிசாலையினை பயன்படுத்தலாம்.
நல்ல நீர்வளமுள்ள இடங்களான ஆற்றங்கரை, வாய்க்கால் கரைகளில் செழித்துவளரக்கூடியவை இவை. மஞ்சள் கரிசாலையில் தங்கச் சத்து உள்ளது. வெள்ளைக் கரிசாலையில் இரும்புச் சத்து உள்ளது. உதிரத்தைத் தூய்மையாக்கும். கல்லீரல் மண்ணீரலை வலிமைப்படுத்தும்.
புதிய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு கரிசாலையிலுள்ள சத்துக்கள் பின்வருமாறு அளக்கப்பட்டுள்ளன.
| புரோட்டீன் எனப்படும் புரதம் |
4.4 கிராம்
|
| தாதுப்பொருட்கள் | 4.5 கிராம் |
| இரும்புச்சத்து | 8.9 கிராம் |
| கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து | 9.2 கிராம் |
| கொழுப்பு | 0.8 கிராம் |
| கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து | 306 மில்லி கிராம் |
| பாஸ்பரஸ் | 462 மில்லி கிராம் |
| கிடைக்கும் வெப்ப ஆற்றலின் அளவு |
62 கலோரி |
கரிசலாங்கண்ணி கீழாநெல்லியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய்க்கு அருமையான மருந்தாகும். சிறுநீர்த்தடை, எரிச்சல் முதலானவையும் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் நீக்கி நலம்பெற வைக்க வல்ல மருந்தாக கரிசாலை பயன்படுகிறது. கை,கால் வீக்கம் மற்றும் பாதத்தில் உண்டாகும் வீக்கம் முதலானவை குறையும்.
எனவே கரிசாலையினைச் சமைத்து உண்டு உடலில் இரும்புபோன்ற உறுதியையும், தங்கம் போன்ற மினுமினுப்பையும் பெறுங்கள்.
தொடரும்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2009 23:24)
karisilankani keerai patriya serantha karuthkalai, serapura thoguthu valiyetu iruenthirgal. thangal katuraiai paditha peragu, Athan uapyogam patri nangu arinthu kondom. megavum payanulla karuthu. valthugkal.
nandri.
krishnaraj