| தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காத அளவு முளைத்துவிட்டன. ஆனால் அவை மக்களுக்குப் பயன் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
|
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (7)- பணத்தின் மீதான ஆசைநம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (7) - பணத்தின் மீதிருக்கும் ஆசையை விட்டொழியுங்கள் கவனகரின் முழக்கம் மாத இதழின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்த போது அரங்கராச தேசிக சுவாமிகளின் கருத்துக்கள் வாழ்க்கையின் இயல்புகளை எடுத்துச் சொல்பவைகளாக இருந்தன. புவிவாழ்வைப் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கள் புதுத் தெளிவைப் படிப்பவர்க்கு ஏற்படுத்தும் என்று தோன்றியது. பேராண்மை என்ற திரைப்படத்தில் ஒரு ஆசிரியராக வரும் ஜெயம் இரவி சொல்லும் கருத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டால் பணத்தின்மீதுள்ள பற்று குறைந்து மனத்தின்மீது பற்று அதிகரிக்கும். பண்டமாற்று முறையில் ஆரம்பித்த வணிகத்தில் மனிதன் தான் உருவாக்கும்/விளைவிற்கும் பொருட்களை பிறரிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருட்களைப் பெற்றுக்கொண்டான். அப்போதெல்லாம் உழைப்பது கட்டாயம் தேவைப்பட்டது.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 04 நவம்பர் 2009 16:29) |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (6)- சமச்சீர்க் கல்விநம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (6)- சமச்சீர்க் கல்வி
ஆசிய நாடுகளில் சீனாவின் தற்போதைய வளர்ச்சி அளவிட்டோ இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டோ பார்க்கமுடியாதது. சீனாவின் வளர்ச்சிக்கு அதன் மக்கள் தொகை ஒரு காரணமாக அமைந்திருக்கிறதென்றால், இந்தியாவின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் மக்கள்தொகை என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. மக்கள்தொகை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது மற்றொருநாட்டின் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 21:53) நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (4) - அரசியல்நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (4) - அரசியல்: ஊழல் அரசியலாளர்களைத் தனிமைப் படுத்துங்கள். மக்கள் திறன் என்று கூவிக்கொண்டு ஊழலும் கொடுமைகளும் செய்யும் அரசியலாளர்களை வெறுத்து ஒதுக்குங்கள். அவர்களைத் தனிமைப்படுத்துங்கள். நம் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களே அரசியலாளர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று தன்னைத்தானே பறைசாற்றிக்கொள்ளும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது. நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரமாக இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம், வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தோம் என்று விளம்பரம் வருகிறதே, அதற்குக் கீழே பார்த்திருக்கிறீர்களா? அதில் வெளியீடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை தமிழக அரசு என்றுதான் இருக்கும் அல்லது அரசின் வேறுதுறையாக இருக்கும். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2009 10:17) |
நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (5) - ஊழலும் கையூட்டும்நம்மை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா? (5) - ஊழலும் கையூட்டும் "நம் வேலை நடந்தால் சரி. யார் எக்கேடோ கெட்டுப்போனால் நமக்கென்ன?" என்ற எண்ணமும், குறைந்த வருமானத்திலும் நேர்மையால் மனமகிழ்வடையாமல் "இன்னும்... இன்னும்..." என்றெண்ணி அளவுக்கும் மிஞ்சி பணத்தினை நாடுவதாலும் மேலும் அதிவிரைவில் அதிக அளவு பணம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாலும் நம்மை அழிக்கும் கருவியாக வளர்ந்திருக்கும் ஒன்றுதான் கையூட்டு. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2009 20:54) நிறுவனப் பணியில் நிம்மதியிழப்பவரைக் குறிவைக்கும் கும்பல் - ஓர் எச்சரிக்கைபன்னாட்டு நிறுவனங்களில், மென்பொருள் துறையில், அதிகநேரப் பணியில் இருப்பவர்கள், குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், மேலும் தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திப்பவர்கள் எல்லோரும் படிக்கவேண்டிய விழிப்புணர்வுக் கட்டுரை இது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2009 00:33) |