| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
|
பாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs)நல்லவாயன் சம்பாதித்தானாம், அதை நாறவாயன் தின்னானாம்! இப்படி ஒருபழமொழி கிராமங்களில் உண்டு. இணையத் தேடல் தளங்களில் போய்த் தானியங்கிக் காசாளர் பொறிகளைப்பற்றித் (ATM) தேடினால் பொதுமக்களில் பலர், கருத்துக்களங்களிலும் (forums), வலைப்பூக்களிலும் (blogs) புலம்பித்தள்ளியிருக்கிறார்கள் என்று அறியலாம். அதிலும் ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறிகளால் காசை இழந்த அப்பாவிகள்தான் அதிகமாகத் தென்படுகின்றனர். மற்ற வங்கிகளும் இந்தப் பிரச்சனைகளில் சளைத்தவர்களல்ல என்றே சொல்லலாம். ஒருவர் HDFC வங்கியின் பண அட்டையைப் (ATM Card) பயன்படுத்தி ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறியொன்றில் பணம் எடுக்க முனைந்திருக்கிறார்.
கருத்துரைக்கவும் (3 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:27) |
மலைச்சரிவுஇப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?
இது என்ன கேள்வி என்கிறீர்களா? இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:24) கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்கள்இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா என்று கேட்டால் கூட ஆமாம் என்று சொல்லிவிடுவோம். படித்து என்னவென்று புரிந்துகொண்டு பதிலளிப்பது என்பதே இல்லை. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:21) |
இணைய வங்கிச்சேவைகளில் தேவை கவனம்பயன்படுத்துகிறோமோ இல்லையோ, கடனட்டைகள் (Credit Card) வைத்துக் கொள்வது நம்மில் பலருக்கு ஒரு கௌரவமாகத் தோன்றுகிறது. அதுபோலவே இணைய வங்கிச் சேவை (NetBanking) பெற்றுக் கொள்பவர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர். ஆறாம் தேதி GMail மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆக்ஸிஸ் (Axis) வங்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாக தெரிந்த்து. உங்கள் வங்கிக் கணக்குகளை நாங்கள் சரிபார்க்கவேண்டும் எனவே பின் வரும் இணையசுட்டியைத் தட்டி உங்கள் கணக்கைத் திறந்து உள் செல்லுங்கள் என்று வந்திருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்று கேட்கிறீர்கள் தானே… இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 09:23) உணவில் கலக்கப்படும் நஞ்சு
மோனோசோடியம் குளுடாமேட் தெரியுமா உங்களுக்கு? தெரியாது என்று சொல்பவர்கள் யாராயினும் அஜினோமோட்டோ என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுவை கூட்டும் தூள் என்று விளம்பரம் செய்யப்படும் அஜினமோட்டோவின் வேதியல் பெயர்தான் அது! உணவில் கலக்கப்படும் நஞ்சு என்றுகூடச் சொல்லலாம். MSG என்றும் சொல்லப்படுகிறது. ஒரு துளி கலந்தால் சுவை கூடும் ஆனால் வயிறு என்னவாகும் தெரியுமா?
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:23) |