| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |

ஒரு முழுமனிதருக்கு இந்த அளவு தோராயமாக ஒரு மீட்டர் இருக்கும். இதுபோல பெருவிரலையும்(thumb) சுண்டுவிரலையும்(little finger) முடிந்தவரை விரித்துவைத்து அளந்து (ஒரு சாண்) அதன் நீளம் எவ்வளவு என்று தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். மேலும் ஆட்காட்டி விரல் (index finger) மற்றும் நடுவிரல்(middle finger)இரண்டுவிரல்களை மட்டும் சேர்த்துவைத்து அவைகளின் அகலம், கூட மோதிர விரலையும் சேர்த்துவைத்து அவைகளின் மொத்த அகலம், பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் சேர்த்துவைத்து அவைகளின் மொத்த அகலம் இன்னும் பலவிதமான அளவீடுகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது பல இடங்களில் இது பயன்படும் என்று அறிக.
அளவுகோலை எல்லா இடங்களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது அல்லது கொண்டுசெல்லவும் முடியாது. எனவே இது போன்று அளவீடுகளைக் கைகள் மற்றும் விரல்களைக் கொண்டு அளக்கப் பழகிக்கொண்டால் மிகவும் பயன்படுமென்பதை உணர்கிறீர்களா? நமது முன்னோர்கள் விரல்களைச் சேர்த்துவைத்து அளப்பதை விரக்கடை என்றழைத்தனர்.
இத்துடன், மேலும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைக்குட்டை, செல்லிடப் பேசி (Mobile Phone), 100 ரூபாய், 500 ரூபாய், பத்து ரூபாய் பணத்தாள்கள், எழுதுகோல்(pen), பணப்பை(purse) முதலான பொருட்களின் நீள அகலங்களைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். அவசரமான மற்றும் அவசியமான காலகட்டங்களில் மிகவும் பயன்படும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:28)
மிக மிக பயனுள்ள செய்தி...... நன்றி...