| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
மனிதவள மேலாளர் (HR Manager) எனப்படும் பணியின் சிறப்புக்கள் குறித்தும் அப்பணியாற்றுபவர்களின் பொறுப்புக்கள் குறித்தும் இந்தப் பகுதியில் பார்க்கலாம். இந்தப்பணி மிக்கச்சாதாரணமானதல்ல. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இந்தப்பொறுப்புதான் மிகமுதன்மையான காரணமாகத் திகழ்கிறது. தன்னுடன் மற்றும் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடமிருந்து சிறப்பான பண்புகளைப் பிரித்தறிந்து நிறுவனத்தின் நோக்கங்களுக்கு, அதன் பயணப்பாதைக்குத் தேவையானதாக சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்த திட்டமிடல் வேண்டும். மேல்நிலை அலுவலர்களுக்கும், நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமையவேண்டிய ஒரு இன்றியமையாத பொறுப்பு இவர்களுடையதாகும். கீழ்க்காணும் பொறுப்புக்கள் மனிதவள மேலாளருடையதாகும்,
அப்பாடா இவ்வளவு செய்யவேண்டுமா என்கிறீர்களா?....
இதுபோக இன்னும் பல பொறுப்புக்கள் மனிதவளத் துறையினருக்கு உண்டு என்பதால்தான் இவர்களுக்கு பணிச்சந்தையில் அதிக வருமானத்தில் பணிகள் காத்திருக்கின்றன. ஆனால் திறன்மிகுந்த மனிதவள மேலாளர்கள் நம்மில் மிகக்குறைவு. இளைய சமுதாயம் இதனைச் செவ்வனே புரிந்துகொண்டு சரியான MBA படிப்பிற்கான கல்விச்சாலைகளை, பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து படிக்கவேண்டும். மேற்சொன்ன வழிமுறைகள் பின்பற்றப்படாத சிறிய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் அந்நிறுவனங்களின் தலைவர்களுக்குச் சரியான முறையில் அவைகளின் தேவைகளை எடுத்துக்கூறி நெறிப்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். அதற்கு அதிகளவாக ஒரு வருடம்கூட பொறுமையாகச் செயல்படலாம். ஆனால் அதையும் மீறி மேற்சொன்ன வழிமுறைகளைச் செயல்படுத்தாத/ செயல்படுத்த மறுக்கும் நிறுவனங்களில் பணியாற்றுவது மனிதவளத்துறைப் பணியாளர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்குக் கேடு. அதிக வருமானம் கிடைப்பதெல்லாம் இரண்டாம் நிலை. சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ மேற்சொன்ன வழிமுறைகளில் செயல்படும்/செயல்படுத்த முடியும் நிறுவனங்களில் பணியாற்றுவதுதான் சரி.