தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
தமிழில் தட்டச்சு செய்ய முதலில் யுனிக்கோட் (Unicode) பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இதற்குமுன்னால் பயன்பாட்டில் இருந்த அஸ்கி (ASCII) என்ற முறையில் 8 bits மட்டுமே ஒரு எழுத்துக்காக பதிவு செய்யப்படுகிறது. இந்தமுறையில் ஆங்கிலம் மற்றும் அதனை ஒட்டிய மிகச்சில மொழிகளே பதியப்பட்டு வந்தன. மற்ற மொழிகளைப் பதிய அதில் வழிமுறை இல்லை.
முக்கியமாகத் தமிழ் போன்ற அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழிகளின் எழுத்துருக்களைப் பதிய ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பதிவெண் (code) அஸ்கி முறையில் சாத்தியமில்லை. உதாரணமாக A என்ற ஆங்கில எழுத்துக்கு 65 என்ற அஸ்கி பதிவெண் பயன்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு எழுத்தைப் பதியும்போதும் கணிப்பொறி அந்த எழுத்துக்கான அஸ்கி பதிவெண்ணைப் பதிந்து வைக்கிறது. பிறகு நமக்குக் காட்டும்போது பதிவெண்ணை எழுத்துருக்களாக மாற்றிக்காட்டுகிறது (Convertion of ASCII Code to ASCII Character). அதன்பிறகு உருவாக்கப்பட்ட யுனிக்கோட் முறையானது ஒவ்வோர் எழுத்துக்கும் 16 bits அதாவது 2 bytes பதிவு செய்கிறது. அதனால் அதிக எழுத்துருக்களை நம்மால் பதிவு செய்யமுடிகிறது. இந்த யுனிக்கோட் முறைதான் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளை அரவணைத்துக்கொண்டுள்ளது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:17)