(0 வாக்களிப்புகள், சராசரியாக 0 நட்சத்திரங்கள் - மொத்தம் 5 நட்சத்திரங்கள்)

வேலிக்காத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம். சீமைக்கருவேல மரங்கள் கருவேல மரங்கள் போலல்ல மிகவும் கொடிய நச்சுமரங்கள். நமது தரிசு நிலங்களில் குறிதப்பாமல் வளரும் இவை நம் நாட்டைச் சேர்ந்தவையல்ல. அந்நியர்களின் வருகையின் போது வேண்டுமென்றே விதைதூவப் பட்டுப் படர்ந்து வளர ஏற்பாடு செய்யப்பட்டது.

இவைகளிடம் அப்படி என்னதான் நச்சுத்தன்மை இருக்கிறது என்று கேட்கிறீர்கள்தானே? தரிசாக இருந்தாலும் நிலத்தடி நீரை எப்படியாவது உறிஞ்சிக்கொண்டு வளர வரம்பெற்று வந்தவை இந்த மரங்கள். மக்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் பிறதாவரங்களுக்கும் நீரின்றி வரண்டு காணப்படும் இடங்களில் கூட இவை செழித்து வளர்ந்திருப்பதை நீங்களே காணலாம். வெட்டிப் பிடுங்கி எறிந்தாலும் மீண்டும் முளைத்து வந்து செழிக்கும் தன்மை நம்மை வியப்பில் ஆழ்த்தும் இந்தச் சீமைக்கருவேல மரங்கள் நிழல்தரும் அளவுக்குக்கூட மரமாக வளராமல் பக்கவாட்டில் வளரும்.சீமைக்கருவேல மரம்

நீரை ஆவியாக்கி வானத்திலேற்றி மழைக்குக் காரணமாக இருக்க மரங்களை நாம் வளர்க்க வேண்டும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அதற்காகத்தான் சாலையோர மரங்களை நமது அமைச்சர்கள் நட்டு நல்ல பெயரை வாங்கிக்கொள்கிறார்களல்லவா?

ஆனால் இந்த மரத்தில் நீரை ஆவியாக்கும் தன்மை மிக மிகக் குறைவு. இது முளைத்திருக்கும் இடங்களில் வேறு எந்தச் செடியும் பெரியதொரு செழிப்பில் இருக்கும் வாய்ப்பில்லை. இவைகளால் வரும் தீமைகள் பின்வருமாறு:

  1. மற்ற செடிகளை, மரங்களை வளர விடாமல் தடுத்தல், அவற்றின் சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளுதல்
  2. நிலத்தடி நீரை உறிஞ்சி அதன் மட்டத்தைக் கீழிறக்குதல்
  3. நீரை உறிஞ்சினாலும் ஆவியாக்காமல் தனக்குள்ளே பதுக்கிவைத்துக் கொள்ளுதல்
  4. நிழலுக்குக் கூடப் பயன் தராமல் நிலத்தை பாழ்படுத்துதல்
  5. வளரும் நிலத்தை தரிசு நிலமாகவே வைத்திருத்தல்

இப்படி எவ்வளவோ தீமைகளைத் தரும் வேலிக்காத்தானை நாம் இருந்த இடம் தெரியாம ஒழிக்க அரசு அதிகாரிகள் முதல் அறிஞர்கள் வரை ஒன்று சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு புரட்சி செய்தாலன்றி நம் நாட்டுச் செழிப்பினை மீட்டு வருவது கடினம்.


கருத்துரைகள் (0)
கருத்துரைக்கவும்
உங்கள் தொடர்பு விவரங்கள்:
கருத்துரை:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:):grin;)8):p:roll:eek:upset:zzz:sigh:?:cry:(:x
Security
படத்திலிருக்கும் ஆங்கிலக் குறியீட்டுச்சொல்லை உள்ளிடவும்.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 22:53)