| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
|
வேலிக்காத்தானை ஒழிப்போம். வளம் பெருக்குவோம்வேலிக்காத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம். சீமைக்கருவேல மரங்கள் கருவேல மரங்கள் போலல்ல மிகவும் கொடிய நச்சுமரங்கள். நமது தரிசு நிலங்களில் குறிதப்பாமல் வளரும் இவை நம் நாட்டைச் சேர்ந்தவையல்ல. அந்நியர்களின் வருகையின் போது வேண்டுமென்றே விதைதூவப் பட்டுப் படர்ந்து வளர ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 22:53) |
||
|