| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
நல்லவாயன் சம்பாதித்தானாம், அதை நாறவாயன் தின்னானாம்!
இப்படி ஒருபழமொழி கிராமங்களில் உண்டு. இணையத் தேடல் தளங்களில் போய்த் தானியங்கிக் காசாளர் பொறிகளைப்பற்றித் (ATM) தேடினால் பொதுமக்களில் பலர், கருத்துக்களங்களிலும் (forums), வலைப்பூக்களிலும் (blogs) புலம்பித்தள்ளியிருக்கிறார்கள் என்று அறியலாம். அதிலும் ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறிகளால் காசை இழந்த அப்பாவிகள்தான் அதிகமாகத் தென்படுகின்றனர். மற்ற வங்கிகளும் இந்தப் பிரச்சனைகளில் சளைத்தவர்களல்ல என்றே சொல்லலாம். ஒருவர் HDFC வங்கியின் பண அட்டையைப் (ATM Card) பயன்படுத்தி ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறியொன்றில் பணம் எடுக்க முனைந்திருக்கிறார்.
வலைஇணைப்புக் கோளாறு (Network Error) என்று செய்தி வந்திருக்கிறது. ஆனால் பணம் எடுக்கப்பட்டதாகக் கணக்கு வைத்துக்கொண்டதால் அவரின் பணம் 5000/- விழுங்கப்பட்டுவிட்டது. இதுபோல பஞ்சாப் வங்கியில் ஒருவர் பெற்றிருந்த பண அட்டையை வைத்து இந்திய அரசின் மாநில வங்கியின் (State Bank) தானியங்கிக் காசாளர் பொறியில் எடுத்தபோது அவரின் பணமும் கணக்கிலிருந்து களவாடப்பட்டது.
பொதுவாக இந்தப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல ஒரு விண்ணப்பப் படிவம் வங்கிகளிலெல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அதை நேரில் சென்று எழுதிக்கொடுத்தால் 30 நாட்கள் காத்திருக்கவைத்துவிட்டு கடைசியில் பெரும்பாலான பேருக்கு "இல்லை! நீங்கள் பணம் எடுத்திருக்கிறீர்கள்" என்றுதான் பதில் சொல்லி அனுப்புகிறார்கள் என்று அவர்கள் அந்தத் தளங்களில் தங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். பணம் எவ்வளவு இந்தப் பொறிகளில் ஏற்றப்பட்டது? பின் மீண்டும் திறக்கும்போது எவ்வளவு மிச்சமிருந்தது? என்று கணக்குப் போட்டு இந்த வங்கிகள் உங்களுடைய புகார்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால் இடையில் எங்கோ இந்தக்கோளாறுக்கும் மேல் பணம் ஏற்ற வரும் வங்கி ஊழியர்கள் அமுக்கிக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இந்திய நுகர்வோர் முறையீடு என்ற தளத்தில் இதுபோன்ற புலம்பல்களை ஏராளமாக நீங்கள் காணலாம். இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
கடன் அட்டைக்குப் (Credit Card) பணம் சொலுத்தவில்லை என்றால் குண்டர்களை அனுப்பும் இந்த வங்கிகள், நம் பணத்தைச் சுருட்டிக்கொள்கிறபோது நம்மை 30 நாட்கள், 40 நாட்கள் என காத்திருக்கச் செய்வது இந்திய அரசாங்க ஏட்டின் கேவலமான பக்கங்கள்.
சென்ற சிலவாரங்களுக்கு முன் Indian Reserve வங்கி 12 நாட்களில் பணத்தைத் திருப்பித்தரவேண்டும் இல்லையென்றால் வட்டியோடு சேர்த்து தண்டத்தொகையினையும் தனது வாடிக்கையாளருக்குத் தரவேண்டும் எனக் கடுமையாகச் சட்டம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. எங்கே தனிமனிதன் மாட்டிக்கொண்டாலும் அவனை அலைக்கழித்து அலங்கோலப் படுத்தும் சட்டம், நிறுவனங்களையும் வங்கிகளையும் கண்டுகொள்வதே இல்லை. பெயருக்குத்தான் இவை சட்டங்கள் ஆனால் பாதிப்பென்னவோ பொதுமக்களுக்குத்தான்.
எது எப்படியோ நீங்கள் கொஞ்சம் சிலிர்ப்பாகவே இருங்கள். பின்வருவனவற்றை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள்,
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:27)