மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
|
பாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs)நல்லவாயன் சம்பாதித்தானாம், அதை நாறவாயன் தின்னானாம்! இப்படி ஒருபழமொழி கிராமங்களில் உண்டு. இணையத் தேடல் தளங்களில் போய்த் தானியங்கிக் காசாளர் பொறிகளைப்பற்றித் (ATM) தேடினால் பொதுமக்களில் பலர், கருத்துக்களங்களிலும் (forums), வலைப்பூக்களிலும் (blogs) புலம்பித்தள்ளியிருக்கிறார்கள் என்று அறியலாம். அதிலும் ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறிகளால் காசை இழந்த அப்பாவிகள்தான் அதிகமாகத் தென்படுகின்றனர். மற்ற வங்கிகளும் இந்தப் பிரச்சனைகளில் சளைத்தவர்களல்ல என்றே சொல்லலாம். ஒருவர் HDFC வங்கியின் பண அட்டையைப் (ATM Card) பயன்படுத்தி ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறியொன்றில் பணம் எடுக்க முனைந்திருக்கிறார்.
கருத்துரைக்கவும் (3 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:27)
இணைய வங்கிச்சேவைகளில் தேவை கவனம்பயன்படுத்துகிறோமோ இல்லையோ, கடனட்டைகள் (Credit Card) வைத்துக் கொள்வது நம்மில் பலருக்கு ஒரு கௌரவமாகத் தோன்றுகிறது. அதுபோலவே இணைய வங்கிச் சேவை (NetBanking) பெற்றுக் கொள்பவர்களும் இப்போது அதிகரித்துவிட்டனர். ஆறாம் தேதி GMail மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆக்ஸிஸ் (Axis) வங்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாக தெரிந்த்து. உங்கள் வங்கிக் கணக்குகளை நாங்கள் சரிபார்க்கவேண்டும் எனவே பின் வரும் இணையசுட்டியைத் தட்டி உங்கள் கணக்கைத் திறந்து உள் செல்லுங்கள் என்று வந்திருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்று கேட்கிறீர்கள் தானே… இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 09:23) |