|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
மழைக் காகிதங்கள் மக்கிப் போக!பாலிதீன் பைகள் என்றழைக்கப்படும் மழைக்காகிதங்கள், அதனால் புவிமாசுபடுதல் மற்றும் பல கொடுமையான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாள்தோறும் கோடிக்கணக்கில் பல பாலித்தீன் பைகள் சாலையிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் வீசி எறியப்பட்டு அதன் மூலம் புவியானது கண்டபடி மாசுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. பாலிதீன் பைகளுக்கான அரசின் சட்டங்கள், கெடுபிடிகளும் அதனுடன் சேர்ந்து காற்றில் பறக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 28 திசம்பர் 2009 11:21) பாலும் கள்ளும் வெள்ளைதான் இதனை அறிவார் இங்கு இல்லைதான்ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னைப் பாலியல் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.
|
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகுபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 17 திசம்பர் 2009 07:40) உறிஞ்சிய புகையே உனக்குப் பகைசிங்கப்பூரில் பணியாற்றும் ஈஸ்வரமூர்த்தியின் மூலம் இந்த அசைபடம் எனக்குக் கிடைத்தது. பார்த்தபோது உயிர் ஒரு நிமிடம் நின்றுபோனது போன்ற உணர்வு எனக்குள்ளே... இதை நமது பனித்துளிகள் வாசகருக்காக தமிழில் படைக்கவேண்டுமென்று ஆசை. விண்டோஸ் மூவி மேக்கர் மூலம் தமிழாக்கம் செய்து படைத்திருக்கிறேன். (நன்றிகள் : மூர்த்தி அவர்களுக்கு) முக்கியமாக சாமிமை புரொடெக்சன்ஸ் என்ற அந்த ஜப்பான் நிறுவனத்துக்கு பனித்துளிகள் தள வாசகர்களின் சார்பாக நன்றிகள் கோடி . கொஞ்சம் நேரமெடுத்தாலும் அசைபடத்தை முழுவதும் பார்க்கவும். இது உங்களுக்குத் தெரிந்தே ஆகவேண்டிய ஒன்று. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 09 திசம்பர் 2009 06:14) |
















