|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் விலையேற்றமும் நாட்டின் பணவீக்கமும்அரசுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் மக்களின் நலனுக்குமே அரசாங்கத்தால் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திராகாந்தி தேசியத்திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொலைக்கல்வி வழங்குவதில் முன்மாதிரிப் பல்கலைக்கழகமாக விளங்கவே உருவாக்கப்பட்டு பாராளுமன்றச்சட்டமாக இயற்றப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல மக்கள் வரிப்பணத்திலும் (சாலைவரி, வீட்டுவரி, வருமான வரி இப்படிப்பல வரிகள்) அந்நியச்செலாவணியிலுமே பல நிறுவனங்களை இயக்கி அதன் மூலம் நாட்டின் தேவைகளையும் நாட்டு மக்களின் தேவைகளையும் தீர்த்துவைக்கவே (இலாப நோக்கில் இயங்காமல்) பல அரசுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் முக்கியமான தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 21:29) தமிழில் இதுவரை வந்திராத ஒரு மோசமான திரைப்படம்காசை வாங்கிக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினால்கூட இந்த தணிக்கைக் குழுவும் அதற்குத் துணைநிற்பவர்களும் படத்திற்கு சான்றளித்து படம்பார்க்க அனுமதிப்பார்கள் என்று தெரியும் தற்போது வெளிவந்திருக்கும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படத்தைப் பார்ப்பவர்க்கு. அத்தனையும் வக்கிரம். வக்கிரத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனலாம். செல்வராகவன் என்ற இயக்குனருக்கு, இதற்காகத் தூக்கு தண்டனை அளித்தாலும் அதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 18 சனவரி 2010 08:30) |
வேலிக்காத்தானை ஒழிப்போம். வளம் பெருக்குவோம்வேலிக்காத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்களை வளரவிட்டு பெரியதொரு அழிவை நமது நாட்டுக்கு அளித்திருக்கிறோம். சீமைக்கருவேல மரங்கள் கருவேல மரங்கள் போலல்ல மிகவும் கொடிய நச்சுமரங்கள். நமது தரிசு நிலங்களில் குறிதப்பாமல் வளரும் இவை நம் நாட்டைச் சேர்ந்தவையல்ல. அந்நியர்களின் வருகையின் போது வேண்டுமென்றே விதைதூவப் பட்டுப் படர்ந்து வளர ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 22:53) அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரைஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரை "ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது சித்தர் வாக்கியம். தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறப்பூக்கள் பூத்து அழகாகக் காட்சிதரும் ஆவாரை தங்கச் சத்தும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. நாடி நரம்புகளில் தளர்ச்சியைப் போக்கி உடலை வன்மையாக்கும். மேகவெட்டையையும் உடலின் உள்வெப்பத்தையும் தணித்து, குளிர்ச்சி தரும். உடலைத் தங்க நிறமாக்கும் உடல்வறட்சியையும் சோர்வையும் நீக்கி வலிமைதரும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 07 சனவரி 2010 08:09) |
















