|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
அடிமையானாய் தமிழா!பல நாட்கள் ஆயிற்றுக் கவிதை எழுதி. என் நேரம் மிகக்குறைவாய் இருந்துவிட்டபடியால் என்னால் எண்ணி எழுத முடியாத நிலை. ஒரு ஞாயிறு மாலை அமர்ந்திருந்தபோது தமிழனின் ஆறாவது விரலாகிப்போன தொலைக்காட்சி இயக்கி (Remote Control) கையில் வைத்துத் திரும்பத்திரும்ப விசைகளை அழுத்தியபோது அந்த மாலை நேரச் சூரியன் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது. ஒருகணம் நிறுத்திப் பார்த்தேன். போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி நடத்துனர் போட்டி விதிகளைப் படித்தபோது மனது கொஞ்சம் வலித்தது.
கருத்துரைக்கவும் (3 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 திசம்பர் 2009 18:49) கலப்படத்தால் கலங்குது கண்கள்கலப்படம் என்பது தற்பொழுதெல்லாம் வணிகர்களுக்கு ஒரு பாடமாகவே ஆகிவிட்டிருக்கிறது. எதை எதோடு சேர்த்து கணிசமான வருமானம் பார்க்கலாம் என்பதுதான் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லித் தந்துவிட்டுப் போகிறார்கள். இதனால் வழிவழியாகக் கலப்படக் கொள்ளை சமுதாயத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. தேயிலைத்தூளில் ஆரம்பித்து மஞ்சள், பருப்பு, அரிசி என்று இதன் பட்டியல் நீண்டு வண்டிகளுக்கான எரிபொருள்வரை கலப்படமோ கலப்படம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 06 திசம்பர் 2009 16:06) |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம்சிவாலயங்களிலும் மற்ற ஆலயங்களிலும் சிறப்பாக வளர்க்கப்படும் தெய்வீக மூலிகையான வில்வமரத்தின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. உக்கிரமான சிவனைக்குளிர்விக்க வில்வ இலைகளால் அர்ச்சிப்பதாக நம்பிக்கை நம்மிடத்திலுண்டு. இந்த இலைகளை பிரசாதமாகவும் உண்டு நோய்களையும் ஆன்மீகம் சார்ந்த மருத்துவ முறைகளையும் மேற்கொள்ள நம் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் உண்மைதான் இந்த வழிபாட்டு முறைகளெல்லாம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 06 திசம்பர் 2009 16:24) கூகுளின் சகுனி வேலைகூகுளின் சகுனி வேலை
நாமெல்லாம் கூகுளின் வரைபடங்களைப் (Google Maps) பார்த்திருப்போம். இதேபோல் மற்ற நாடுகளிலும் பார்வையாளர்கள் ஏராளம். ஆனால் இந்த கூகுள் தன் வரைபடங்களின் மூலம் ஒரு கருங்காலித்தனத்தைச் செய்திருக்கிறது. நம் நாட்டின் அங்கங்களாக இருக்கும் அருணாச்சலப்பிரதேச மாநிலம், பலகாலமாக பிரச்சனைக்குரிய காஷ்மீர் மாநிலம் மேலும் பலபகுதிகளை ஒவ்வொரு நாட்டின் கூகுள் பார்வையாளர்களுக்கும் வேறுவேறாகக் காட்டி சகுனி வேலை செய்துள்ளது. வெக்கங்கெட்ட நமது அரசாங்கத்திற்கு இதைக்கண்டு, கண்டிக்க வக்கில்லை.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 16:16) |
















