பழங்களால் பெறும் நன்மைகள்

பழங்களால் பெறும் நன்மைகள்

May 9, 2013

பழங்களிலும் காய்கறிகளிலும் ஃபிளேவனய்டுகள் (flavonoids) எனப்படும் சேர்மங்கள் காணப்படுகின்றன. இந்தச் சேர்மங்கள்தான் பழங்களின் கவர்ந்திழுக்கும் நிறங்களுக்குக் காரணிகள். பப்பாளி, செம்புற்றுப்பழம் (Strawberry) போன்ற பழங்களின் அழகுநிறங்களுக்குக் காரணம் அதிலிருக்கும் அதிகப்படியான ஃபிளேவனய்டுகளே.

அது சரி இந்த ஃபிளேவனய்டுகளில் அப்படி என்னதான் சிறப்பு என்று கேட்கிறீர்களல்லவா?

  • இவை கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காப்பாற்றும் திறன் வாய்ந்தவை
  • புற்றுநோய்க்கு எதிரானவை; புற்றுநோயைக் குணமாக்கும் திறன் கொண்டவை.
  • உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களாகச் (Antioxidants) செயல்படும்.

மேற்சொன்ன காரணங்களாலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் உடலுக்கு நன்மைதருவனவாக அமைகின்றன.

ஃபிளேவனய்டுகளிலேயே மிக இன்றியமையாதது குவர்சடின் (Quercetin) (வேதியியலில்: C _{15}H _{10}O _{7} ) எனப்படும் ஒன்றாகும். ஏறக்குறைய எல்லா காய்கறி மற்றும் பழங்களில் இவைகள் தவறாமல் இடம்பெற்றிருப்பவை. இதனால் நன்மை என்ன தெரியுமா? இது புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மை பெற்றது.

இது நீரில் அவ்வளவாகக் கரையாது. அஸ்கார்பிக் அமிலமாக இருக்கும் C உயிர்ச்சத்து (Vitamin C) இதைக் கரைக்கவும் குவர்சடினை புற்றுநோயைக் கொண்டிருக்கும் உயிரணுக்களைப் (Cells) பிரிந்து பரவலடையாமலும், மாற்றுருக் கொள்ளாமலும் தடுத்து அவற்றை அழிக்கும் திறன்பெற்றதாக்குகிறது.

குவர்சடின் புற்றுநோய் அணுக்களைத் தாக்கிக் கொல்லுகையில் நல்ல உயிரூட்டமுள்ள உடலின் உயிரணுக்களைத் தொடுவதில்லை. இதனால் அவைகள் பாதிப்படைவதுமில்லை.

மேலும் பழங்களை ஏன் உண்ணவேண்டுமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு,

  • பழங்கள் நிறைய நீராதாரம் கொண்டவை.
  • நினைவாற்றலை அதிகரிக்கத்தூண்டுகின்றன.
  • நார்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன.
  • பழங்கள் கெட்ட கொழுப்பே அற்ற உணவாகும்.
  • இயற்கை உணவு

எனவே பழங்களை கட்டாயம் உண்ணுங்கள்! பயன்பெறுங்கள்.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>