மூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்

மூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்

Feb 10, 2014

சிலந்திக் கூடுகளில் காலை நேரங்களில் பனி இறங்கி பனித்துளித் திவலைகள் இருப்பதைப்பார்த்திருப்போம். கனடாவில் ஃபாக் குவஸ்ட் என்ற சேவை நிறுவனம் ஒன்று இந்தப் பனித்துளிகளைச் சேகரித்து நீர்பெற்று அதை குடிநீராகவும், பாசனத்துக்கும் மற்றும் காடுவளர்ப்புக்கும் பயன்படுத்திவருகிறதாம்.

இந்த மூடுபனிச் சேகரிப்புக்கு அவர்கள் பெரிய கைப்பந்துவலையமைப்பு போன்ற மெல்லிதான துணிபோன்ற பாலிபுரபலின் அல்லது பாலிஎத்திலின் வலைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அது நீரை சிலந்திவலைபோல சேகரிக்க வல்லதாக இருக்கிறதாம். இதுபோன்ற பல இடங்களில் இந்தத் திட்டத்தில் 2 முதல் 100 வலைகள் அடிக்கப்பட்டு ஒருவலையிலிருந்து 150 முதல் 750 லிட்டர்கள் அளவு தூய்மையான நீர் ஒரு நாளைக்குச் சேகரிக்கப் படுகிறதாம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கேற்ப தூய்மையான பனித்துளிகள் சேகரிக்கப்பட்டு அந்த வலையினடிப்பகுதியிலிருக்கும் தோணியிலிருந்து அவர்கள் வைத்திருக்கும் சேமிப்புக்கலன்களில் சேரும். இதன்மூலம் கிராம விவசாயிகளுக்கு குடிநீர் மட்டுமன்றி அவர்களின் தோட்டத்துக்குத் தேவையான நீர் தரப்படுகிறதாம். அந்த விவசாயிகள் தோல் பதனீட்டுக்குத் தேவையான டன்னின் உருவாக்கும் மரங்களின் பாசனத்துக்கும் அவர்கள் பயன்படுத்துகிறார்களாம்.

நம்மூரில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நீரை பெரிய கொள்கலன் சுமைதூக்கி வாகனங்களில் டீசல் செலவுசெய்து கொண்டுவந்து சேர்த்துவதில் உள்ள சிரமத்தை எண்ணிப் பார்க்கையில் இது எவ்வளவு வரப்பிரசாதமான தொழில்நுட்பம் என்பதைப் பாருங்கள்!
தொடர்புள்ள வலைதளங்கள்!

Fog Quest Organization State of the Planet From Earth Institute
The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>