பனித்துளிகள் கருத்துக்களம்
வருக! பார்வையாளர்   [பதிவுசெய்]  [புகுபதிகை]
 பொருள் :என்னைப் பற்றி . . ... 2011-02-11 09:45:17 
tamilarangam
புதியவர்
இணைந்தது: 2011-02-11 09:29:42
பதிவுகள்: 1
இடம்
மன்றம் : மன்ற அங்கத்தினர் அறிமுகம்
தலைப்பு : என்னைப் பற்றி . . .

என் பெயர் கந்தவேல்குமரன் ந

எனது ஊர் நாகர்கோயில் அருகே விளாத்திவிளை

எனது படிப்பு பொறியியலில் முது நிலை பட்டம் தற்போது ஆராய்ச்சி

எனது தொழில் பொறியியல் கல்லூரி பேராசிரியன்

எனது பொழுது போக்கு கவிதை  (தமிழுக்காக நான் , தமிழோடு நான், தமிழின் கனவில் நினைவில் நான்)

எனது முகவரி

துணைப் பேராசிரியர்,

அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி,

மணவிளை, வெள்ளிச்சந்தை - 629203

கன்னியாகுமரி மாவட்டம்

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
 பொருள் :பதில்:தாய்மொழிப்பாடத்துக.. 2009-10-24 23:22:35 
சதீஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-07-18 22:59:51
பதிவுகள்: 5
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  
மன்றம் : வாக்கெடுப்புகளின் மீதான விவாதங்கள்
தலைப்பு : தாய்மொழிப்பாடத்துக்கு 77 விழுக்காடு ஆதரவு!

பொருள் :பதில்:தாய்மொழிப்பாடத்துக்கு 77 விழுக்காடு ஆதரவு!

இதற்கு 77 விழுக்காடு ஆதரவு என்பது மிக குறைவு. தாய்மொழிப்பாடம் மட்டுமே ஒருவனை மனிதன் ஆக்குகிறது.

இதில் தாய்மொழிப்பாடம் இல்லை என்று வாக்களித்தவர்கள் இந்த கருத்துக்களதில் தங்கள் கருத்தைக் கூறவும்...

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்கு தமிழன்”
 பொருள் :ஒவ்வொரு நாளும் அதிகளவு தண.. 2009-10-24 23:14:27 
சதீஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-07-18 22:59:51
பதிவுகள்: 5
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  
மன்றம் : உடல் நலம் மற்றும் மருத்துவத் தளங்கள்
தலைப்பு : அதிகமாக நீர் பருக 10 காரணங்கள்

பொருள் :ஒவ்வொரு நாளும் அதிகளவு தண்ணீர் அருந்துவது எப்படி

தினமும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதற்கு, பல்வேறுபட்ட காரணங்கள் உண்டு. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, உடலில் நீரின் அளவு குறைவதை தடுக்கிறது, உடலை சுத்திகரிக்கிறது மற்றும் குணமடையவதை மேம்படுத்துகிறது. கலோரிகள் அதிகமாக உள்ள குளிர்பாணங்களுக்கு பதிலாக தண்ணீர் எடுத்துக்கொள்வது, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. கீழ் காணும் வழிகளை பின்பற்றி, போதுமான அளவு அதிக அடிப்படை தேவையான நீரை பெறுகிறீர்களா என்பதனை உறுதிசெய்யுங்கள்?

 

  1. உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை நிர்ணயுங்கள்: நீங்கள் 8 க்கு 8 என்ற விதியினை கேள்விப்பட்டிருப்பீர்கள் – ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் டம்லர் தண்ணீரை (2 க்வார்ட்ஸ், 1.8 லிட்டர்) குடியுங்கள் – ஆனால் ஒரு நபருக்கு தேவையான தண்ணீரின் அளவு என்பது அவர்களின் உடல் எடை மற்றும் செயல் அளவு பொறுத்து வேறுபடுகிறது. மெட்ரிக் முறையை பயன்படுத்துபவர்கள் தங்கள் எடையை (கிலோ கிராம்களில்) 30 – தால் வகுங்கள் (உ-ம். 70 கி.கி எடையுள்ள ஒருவருக்கு 2.3 லிட்டர் தண்ணீர் ஒருநாளுக்கு தேவைப்படுகிறது). இந்த பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு கருத்துவேறுபாடுள்ளது மற்றும் சில வல்லுனர்கள் இதை மிகைப்படுத்துதலென நம்புகின்றனர்.
  2. நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் தண்ணீரை அளவிடுங்கள். இதை சில நாட்களுக்கு செய்யுங்கள். ஒருவேலை நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாக அருந்தினால், கீழ்க்காணும் சில ஆலோசனைகளை பின்பற்ற முயற்சியுங்கள்.
  3. எங்கு சென்றாலும் உங்களுடன் தண்ணீரை பாட்டில்களில் அல்லது பிறபாத்திரங்களில் எடுத்துச்செல்லுங்கள். கண்ணாடிப்பாட்டில்களை பயன்படுத்தும்படி அதிகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனைத்து கண்ணாடி பாட்டில்களையும் பயன்படுத்த ஆரம்பியுங்கள். வெகுவிரைவில் உங்களுக்கு ஏற்ற பட்டில் எது என்பதை கண்டடைவீர்கள். கண்ணாடிப்பாத்திரத்திலுள்ள தண்ணீர் ஒருபோதும் நஞ்சுள்ளதாக மாறாது.
  4. உங்களுக்கு பக்கத்தில் ஒரு டம்பளர் அல்லது கப் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள் நீங்கள் அதிக நேரம் அமர்ந்து வேலை வேலை செய்யும் போது, அருகிலேயே நீரை வைத்துகொண்டு, தவறாமல் தண்ணீர் அருந்துங்கள்.
  5. ஒவ்வொரு மணி நேரத்தின் ஆரம்பத்திலும் ஒலி எழுப்பும் வண்ணம் டிஜிடல் கைகிடைகாரத்தை அணிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதை ஒவ்வொரு மணி நேரமும் ஒரு டம்லர் தண்ணீர் அருந்த நிணைப்புட்டும் வண்ணம் பயன்படுத்தங்கள். அடுத்த ஒலி எழும்பும் முன்னதாகவே தண்ணீர் அருந்த முடிவு செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு, ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர் அருந்தினால் (6 அவுன்ஸ் அல்லது 180 மி லி), 8 மணி நேர வேலை நாளின் முடிவில், 48 அவுன்ஸ் (1.4 லி) தண்ணீர் உட்கொள்ளக்கூடும்.
  6. ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனத்தை பெற்றுக்கொள்ளுங்கள். சுத்திகரித்த தண்ணீர் மிக சுவையுள்ளதாக இருக்கும் மற்றும் நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கவும் உதவும்.
  7. எலும்பிச்சையை உங்கள் தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வது தண்ணீரை சுவையுள்ளதாக்குகிறது மற்றும் நீங்கள் அதிக தண்ணீரை விறிம்பி எடுத்துக்கொள்ள செய்கிறது. அதிக துவர்ப்புள்ளதாக மாறதபடி பார்த்துக்கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் துண்டுகளையும் டம்லரில் உள்ள தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளலாம். சில புதினா இலைகளையும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் இட்டு, அவை இரவு முழுவதும் தண்ணீரில் இருக்கும் வண்ணம் விடலாம். இது தண்ணீரை வாசனையுள்ளதாக மாற்றும். ஒரு செலவு இல்லாத மாற்று முறையாகும்.
  8. தண்ணீர் அதிகமக உள்ள உணவுகளை உட்க்கொள்ளுங்கள். தர்பூசணி போன்ற, எடையில் 92 % தண்ணீர் உள்ள பழங்களை உண்ணலாம். கோடைக்காலங்களில் விதையில்லாத தர்பூசணி பழச்சதையினை ஐஸ் கட்டியுடன் சேர்த்தும் மற்றும் சில புதினா இலைகளை (விருப்பத்திற்கேற்ப) சேர்த்தும் உண்ணலாம். இது ஒரு அதிக புத்துணர்வூட்டும் பாணமாகும், மிகக்குறிப்பாக. ஒரு தக்காளியில் 95 % தண்ணீர் உள்ளது. ஒரு முட்டையில் 74 % தண்ணீர் உள்ளது. சமைக்காத கொழுப்பில்லாது இறைச்சியில் 70 % தண்ணீர் உள்ளது.
  9. தண்ணீர் சுவையுள்ளதாக இருக்குவேண்டுமெனில் தண்ணீரை குளிர்வுள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் ஒரு மக் தண்ணீரை குளிர்பதன பெட்டியில் வையுங்கள். விளையாடச்செல்லும் போது எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டலில் ஐஸ் கட்டி அல்லது உறைந்த தண்ணீரை சேர்க்கவும், இது மெல்லமெல்ல கரைந்து தண்ணீரை குளிர்ந்ததாக வைத்துக்கொள்ளும். இருந்தபோதும் அதிக குளிர்ந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளும் போது தண்ணீரின் வெப்பம் உடல் வெப்பத்திற்க்கு வரும் வண்ணம் உடலில் உள்ள சக்தியானது விரையமாகும். ஆனாலும் அறை வெப்பநிலையில் உள்ள அல்லது சூடாண தண்ணீரை அருந்துவதைக்காட்டிலும் குளிர்ந்த தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிக கலோரிகளை எறிக்க உதவுகிறது.
  10. உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதனை தட்ப்பவெப்பநிலை வெகுவாக மாற்றுகிறது. வெப்பமான நாட்களில், நீங்கள் வெளியில் இருக்கும் போது உங்களுக்கு ஏற்படும் வியர்வையின் மூலம் இழக்கப்படும் உடல் தண்ணீரின் அளவை சமன் செய்ய நீங்கள் அவசியம் அதிகளவு தண்ணீர் அருந்தவேண்டும். அப்படிச்செய்வது உங்கள் உடலில் இழந்த தண்ணீரை ஈடுசெய்வதோடு மட்டுமல்லாமல், இது வெப்பம் – சம்மந்தமான உடல் நோய்களையும் தடுத்துநிறுத்தும்.
இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-10-24 23:14:27 , செய்தவர்: சதீஷ் குமார் , காரணம்:
என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்கு தமிழன்”
 பொருள் :அதிகமாக நீர் பருக 10 காரணங்.. 2009-10-24 23:06:27 
சதீஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-07-18 22:59:51
பதிவுகள்: 5
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  
மன்றம் : உடல் நலம் மற்றும் மருத்துவத் தளங்கள்
தலைப்பு : அதிகமாக நீர் பருக 10 காரணங்கள்

பொருள் :அதிகமாக நீர் பருக 10 காரணங்கள்

தண்ணீர் அருந்துவது சாதாரண செயல் அல்ல. அது மிக முக்கியமான செயல். உடலின் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக செயல்பட நீர் அவசியம். உடலின் அனைத்து பகுதிகளின் செயல்பாடும் தண்ணீரை நம்பியே உள்ளது.

நீர் பருகுவது ஏன் நல்லது மற்றும் நீர் அருந்துவதை ஏன் அன்றாட பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்

1. ஆரோக்கியமான தோலைப் பெற

  நம் தோலை உள்ளேயும் வெளியேயும் ஈரத்தன்மையுடன் வைக்க நீர் உதவுகிறது. தோல் காய்ந்து போகாமல் தடுக்கவும், எலாஸ்டிக் தன்மையுடனும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள நீர் அவசியம். நாம் இளமை பொலிவை ஒரு டம்ளர் நீரில் பெறலாம். தண்ணீர் பருகுவதைவிட நம் தோலுக்கு வேறு எதுவும் நல்ல பொலிவைத் தந்துவிடாது.

 

2. உடல் கழிவை நீக்க

  நம் உடலில் குறிப்பாக உணவு குழாயிலிருந்து கழிவை நீக்க நீர் உதவுகிறது. சிறுநீரகம் வடிகட்டும் செயலில் தனித்துவம் வாய்ந்தது. அதன் செயல்பாடுகள் முழுக்க முழுக்க தண்ணீரைக் கொண்டே அமைகிறது. சிறுநீரகம் சிறப்பாக செயல்பட நாம் தினசரி நீர் எடுத்துக்கொள்வது அவசியம். ஏனெனில் குறிப்பாக வயது ஏற ஏற அதன் செயல்பாடுகள் குறையும். உபரியாக உள்ள நைட்ரஜன், யூரியா மற்றும் கீட்டோன்களை நீக்க நீர் உதவுகிறது. எனவே அதிக அளவு புரதம் உள்ள உணவு உண்பவர்களுக்கு இது அவசியமாகிறது.   உங்கள் எடை கூட அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.

 

3. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க

  கலிபோர்னியாவின் லோமா லின்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 20,000 ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தினசரி 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதயநோய் மூலம் மரணம் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறைவு எனக்  கண்டறிந்துள்ளனர்.

 

4. தசைகள் மற்றும் மூட்டுகளில் இறுக்கத்தைத் தளர்த்த

  தசைகள் மற்றும் எலும்பு மூட்டுகளில் உள்ள திரவங்கள் பெரும்பங்கு நீரால் ஆனது. தசைபிடிப்புக்கு நீரிழப்பு மட்டுமே காரணம் அல்ல என்றாலும் சிறிதளவு நீரிழப்புகூட தசை பிடிப்புக்கு இட்டுச்செல்கிறது என தடகள வீரர்கள் கருதுகின்றனர். எனவே உடற்யிற்சிக்கு முன்னும் பின்னும் நீர் அருந்துவது தசைபிடிப்புகளையும் விரைவில் சோர்வு ஏற்படுவதையும் தடுக்கும்.

 

5. ஆற்றல் பெற்று துடிப்புடன் இருக்க

 மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக வியர்வை, சுவாசித்தல், சிறுநீர் மற்றும் மலம் வழியாக 10 கப்  அளவிற்கு நீரிழப்பு ஏற்படுகிறது. சிறிய அளவு  நீரிழப்புகூட கவனமின்மை, தலைவலி, சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்   தினசரி அதிக நீர் அருந்துவது தெளிவான சிந்தனைக்கு உதவும். 85% நீராலான மூளை சிறப்பாக செயல்பட நீர் அவசியம் என ஆய்வாளர்கள்  மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். எனவேதான் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் மேஜை அருகில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இது நாள் முழுவதும் அவர்கள் நீர் அருந்த வசதியாக இருக்கும்.

 

6. மலச்சிக்கலைத் தவிர்க்க

 குடலில் திரவ ஓட்டத்தை அதிகரித்து தண்ணீர் மலச்சிக்கலை தடுக்கிறது. மலச்சிக்கலை தடுப்பதில் தண்ணீர் பெரும்பங்கு ஆற்றுகிறது மலத்தினை இலகுவாக்கி அது மலக்குடலில் எளிதாக செல்ல வழி செய்கிறது. நன்றாக் செரிப்பதற்கும், சத்துகள் உடலில் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கும் வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கும் நீர் அவசியம். நம் உடலிற்கு தேவைப்படும் மாவுச்சத்தும் புரதச்சத்தும் நீரின் மூலம் இரத்ததின் வழியாக பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. . அதே நேரம் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதிலும் நீர் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

 

7. நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க

 தொடர்ந்து தேவையான நீர் அருந்தாமல் இருந்தால் செல்களில் நீரிழப்பு  ஏற்படும். செல்கள் போதுமான நீரைப் பெறாமல் இருந்தால் அவை தளர்ந்து நோய் வருவதற்கான வாய்ப்பு உருவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து வேதி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை உருவாக்கி  பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஏதுவாக அமையும். நாம் போதுமான நீர் எடுத்துக் கொள்ளவில்லையெனில் செல்கள் இரத்தத்திலிருந்து நீரை எடுத்துக் கொள்ளும். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால் இதயம் கடினமாக செயல்பட வேண்டி உள்ளது.

நம் உடலில் முக்கிய உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய இரத்தம் திருப்பி விடப்படுகிறது. இந்த நீரிழப்பு நிகழ்வு நாம் தாகமாக உணரும் முன்னரே தொடங்கி விடுகிறது. இதனால் இரத்ததிலிருந்து கழிவினை நீக்கும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அதிக அளவு நீர் எடுத்துக் கொள்வதால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறையும் என மைசுட் மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர். 48 ஆயிரம் ஆண்களிடம் 10 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் முதல் 20% பேர் ஒரு நாளைக்கு 2500 மில்லி அல்லது அதற்கு மேல் நீர் அருந்தினர். கடைசி 20% பேர் ஒரு நாளைக்கு 1200 மில்லி அல்லது அதற்கு குறைவாக நீர் அருந்தினர். ஒவ்வொரு 240 மில்லி அதிகம் நீர் எடுத்துக் கொள்வதற்கும் 7% வரை புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

8. உடல் வெப்பத்தினை முறைப்படுத்த

 நீர் உடலின் குளிர்விக்கும் அமைப்பினை முறைப்படுத்துகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும்போதோ அல்லது அதற்கு பிறகோ அருந்தும் விளையாட்டுக் குளிர்பானங்கள் பயன் தரும்.  மிதமான உடற்பயிற்சிக்கு சர்க்கரையிடப்பட்ட குளிர்பானங்களை விட தண்ணீர் சிறந்தது என பெரும்பான்மையான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் தான் நம் உடலுக்கு தேவையான மிக முக்கிய சத்து. நம் உடல் எடையில் 55 முதல் 75 சதவீதம் வரை நீர் உள்ளது. உடல் உறுப்புகளையும் அவற்றின் வெப்பநிலையை முறைப்படுத்துவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது.

 

9. கொழுப்புச் சத்தை எரித்து வலுவான தசைகளைப் பெற

  தசைகளை உருவாக்கும் புரதசேர்க்கை நீரிழப்பினால் குறைகிறது. இம்மாற்றத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. என்வே புரத சேர்க்கை தடைபட்டால் குறைந்த அளவு ஆற்றலே புரதமாகிறது எஞ்சியவை கொழுப்பாக உடலில் படிகிறது.    அதிக நீர் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. நீர் உடலின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய நீர் அவசியம். நீர் செரித்தலை சீராக்குகிறது; உடற்பயிற்சிக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.

 

10. நலமுடன் வாழ

நீரிழப்பைச் சரிகட்டி காய்ச்சலை தண்ணீர் கட்டுப்படுத்துகிறது. கிட்டத்தட்ட உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நீர் மிக முக்கியமானதாக இருக்கிறது. உடலில் நீர் பற்றாக்குறையே  பகல்நேர சோர்வுக்கு தூண்டுகோலாக அமைகிறது.. வெறும் 2% நீரிழப்புகூட குறுகியகால மறதி, கணக்கிடுதலில் தவறுகள், அச்சிட்டதாள் மற்றும் கணிணித் திரையைத் தொடர்ந்து கவனிப்பதில் தடுமாற்றம் ஏற்படுத்தலாம்.

நீர் ஒரு உயிர்நாடி;  நீரின்றி அமையாது வாழ்வு. உடல் போதுமான நீரைப் பெற தொடர்ந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.. நாம் முறையாக தண்ணீர எடுத்துக்கொண்டோமானால் நீர் சாதாரணமாக வரக்கூடிய தலைவலி,சோர்வு,மூட்டுவலி மற்றும் இதர நோய்களுக்கு தீர்வாக அமைகிறது..

உடல் உழைப்பில் ஈடுபடும்போதோ, அதிக நார்ச்சத்து உள்ள உணவு உண்ணும்போதோ, கோடைகாலங்களிலும், மலைப்பிரதேசங்களிலோ, குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் வாழும்போதோ மற்றும் காய்ச்சல்,வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு முதலிய நோய் கண்டுள்ள போதோ இயல்பை காட்டிலும் அதிக நீர் எடுத்துக் கொள்ளவேண்டும்.   நாம் போதுமான நீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை சிறுநீரின் நிறத்தை வைத்து முடிவு செய்யலாம். சிறுநீர் சற்றே மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது அடர்நிறத்தில் இருந்தால் அதிக நீர் எடுத்துக் கொள்க. தாகம் ஏற்படும்போதெல்லாம் நீர் பருகுக. ஒரு சாதாரண நாளில் நமக்கு 8 டம்ளருக்கு மேல் நீர் தேவைப்படாது.

முத்தாய்ப்பாக சில வரிகள்! நம் உடல் 90% நீரால் ஆனது. செரித்தல், ஆரோக்கியமான தோல், இரத்த ஓட்டம்,   உடல் வெப்ப முறைபடுத்துதல் மற்றும் இன்னபிற காரணங்களுக்கு நீர் அவசியம். விழித்திருக்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு கிளாஸ் நீர் பருக வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொள்ளுங்கள். தண்ணீரின் சுவை பிடிக்கவில்லை என்று கூறுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்.

தண்ணீர் குடிப்பதை உற்சாகமாக செய்ய இதைப் பின்பற்றுங்கள். தண்ணீர் குடுவையில் புதினா இலைகள், ஸ்ட்ராபெரி, ஆப்பிள் அல்லது எலுமிச்சை துண்டுகளைப் போட்டு வையுங்கள். பின்னர் குளிர வைத்துப் பறிமாறுங்கள். தண்ணீர்க் குடுவையை பிரிட்ஜில் வைத்திருந்தால் உங்களுக்கு எப்பொழுதும் சுவையான தண்ணீர் கிடைக்கும். நீங்கள் “கிலேசு” பழச்சாற்றை பயன்படுத்தலாம். இதில் சுத்திகரிக்கப்பட்ட நீருடன் பழச்சாறு எசன்ஸ் மட்டுமே சேர்க்கப்படுகிறது. செயற்கையான இனிப்புகள் சேர்க்கப்படுவதில்லை.

இது எல்லா உணவுக் கடைகளிலும் கிடைகிறது. மேலும் இது தர்பூசணி, ஹனிடியூ, ராஸ்பெர்ரி, எலுமிச்சை முதலிய பல சுவைகளில் கிடைக்கிறது. மூலிகைத் தேனீர் அருந்தலாம். மூலிகைத் தேனீரில் பலவகை மருத்துவக் குணங்கள் உள்ளன . மேலும் அது பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.. பச்சைத் தேயிலை யெர்பா மட்டிசாய், கமொமைல், புதினா, ராட்பெர்ரி இலை மற்றும் இலவங்கம்/ஆப்பிள் கலந்த தேநீரை நீங்கள் பருகலாம். கோடைகாலங்களில் ஐஸ் கட்டியுடனும் குளிர் காலத்தில் சூடாகவும் குடிக்கலாம். தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்துப் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது கல்லீரல் நச்சு சேர்வதைத் தடுக்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் பயன்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நீர் பருகுங்கள் ! அதிக நீர்ச்சத்து பெறுங்கள் ! நலமுடன் வாழுங்கள் ! தகவல் மூலம்: இந்தியா-கேட்லாக்

நீர் பருகுங்கள் ! அதிக நீர்ச்சத்து பெறுங்கள் ! நலமுடன் வாழுங்கள் !

 

தகவல் மூலம்: இந்தியா-கேட்லாக்

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்கு தமிழன்”
 பொருள் :சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. 2009-10-18 14:14:33 
சதீஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-07-18 22:59:51
பதிவுகள்: 5
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  
மன்றம் : மறுசுழற்சி (Recycling)
தலைப்பு : சுற்றுச்சூழல் பாதுகாப்பு: செல்போனையும் மறுசுழற்சி செய்யலாம்

பொருள் :சுற்றுச்சூழல் பாதுகாப்பு: செல்போனையும் மறுசுழற்சி செய்யலாம்

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பழைய செல்போன்களை குப்பையில் போடுவதற்கு பதிலாக அவற்றை மறுசுழற்சி செய்யும் முறையை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.

 

இதற்காக நோக்கியா நிறுவனம் 'டேக்-பேக்' என்ற மறுசுழற்சி திட்டத்தை கடந்த ஜனவரியில் சோதனை அடிப்படையில் டெல்லி, பெங்களூர், குர்கான், லூதியானா ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்தது.

 

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட 45 நாட்களில் 10 ஆயிரம் செல்போன்கள் கொண்ட 3 டன் கழிவுகள் கிடைத்தன. நோக்கியா செல்போன்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 80 ஆயிரம் டன் மூலப்பொருட்களை பெறமுடியும். இந்த திட்டம் தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று, செல்போன்களை மறுசுழற்சி செய்ய விரும்புகிறவர்களின் வசதிக்காக சென்னையில் 31 நோக்கியா ஷோரூம்களில் மறுசுழற்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரத்தை அறிந்து கொள்ள நோக்கியா வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து 55555 என்ற எண்ணுக்கு green என்று எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

 

மறுசுழற்சி செய்யப்படும் ஒரு செல்போனுக்கு ஒரு மரக்கன்று வீதம் நடுவதற்கு திட்டமிட்டு உள்ளார்கள். இதற்காக சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அந்த இரு நகரங்களிலும் 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள்...

 

இந்த திட்டம் அடுத்த மாதம் கோவை, ஐதராபாத், பெங்களூர், பூனா, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், சண்டிகர், ராய்ப்பூர், டெல்லி, லூதியானா உள்பட 15 நகரங்களில் தொடங்கப்படும்.

 

 

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்கு தமிழன்”
 பொருள் :தாய்மொழிப்பாடத்துக்கு 77 வ.. 2009-09-19 12:45:39 
நிர்வாகி
நிர்வாகி
இணைந்தது: 2009-06-27 23:05:23
பதிவுகள்: 2
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மன்றம் : வாக்கெடுப்புகளின் மீதான விவாதங்கள்
தலைப்பு : தாய்மொழிப்பாடத்துக்கு 77 விழுக்காடு ஆதரவு!

பொருள் :தாய்மொழிப்பாடத்துக்கு 77 விழுக்காடு ஆதரவு!

தாய்மொழிப் பாடம் ஒருவரை மிகச்சிறந்த அறிவாளியாக்குகிறதா? என்ற வாக்கெடுப்பு நமது பனித்துளிகள் தளத்தில் நடந்தது. செப்டம்பர் 19 ம் நாள் மொத்தவாக்குக்கள் 100ஐ எட்டின. அதில் 77 விழுக்காடு வாக்குக்கள் ஆம் என்பதற்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. பதினான்கு விழுக்காட்டினர் இல்லையென்றும் 4 விழுக்காடு தெரியவில்லை என்றும் வாக்களித்திருக்கிறார்கள்.

தாய்மொழிப்பாடத்துக்கான ஆதரவு

 

தாய் மொழிக்கல்வி கற்பதால் என்னென்ன நன்மை தீமைகள் இருக்கிறதென்பதை கருத்துக்களத்தில் விவாதிக்க  உங்களை அழைக்கிறோம். இதுவரை ஆதரவாக வாக்களித்தவர்களும் எதிராக வாக்களித்தவர்களும் உங்கள் பக்கம் இருக்கும் நீதியை/கருத்துக்களை பொதுவாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒளிவுமறைவின்றிச் சொல்லுங்கள்.

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-09-19 12:45:39 , செய்தவர்: நிர்வாகி , காரணம்:
 பொருள் :பன்றிக்காய்ச்சலுக்கு தமி.. 2009-09-11 13:25:16 
கணேஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-06-29 20:41:03
பதிவுகள்: 3
இடம்
மன்றம் : உடல் நலம் மற்றும் மருத்துவத் தளங்கள்
தலைப்பு : பன்றிக்காய்ச்சலுக்கு தமிழக அரசின் இணையதளம்

பொருள் :பன்றிக்காய்ச்சலுக்கு தமிழக அரசின் இணையதளம்

பன்றிக்காய்ச்சலுக்கு தமிழக அரசின் இணையதளம்

 

http://www.swineflutninfo.in/

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-09-11 13:25:16 , செய்தவர்: கணேஷ் குமார் , காரணம்:
அன்பினால் எதையும் சாதிக்கலாம்
 பொருள் :மழைக்காகிதங்கள் (Plastic papers).. 2009-09-11 11:55:53 
கணேஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-06-29 20:41:03
பதிவுகள்: 3
இடம்
மன்றம் : மறுசுழற்சி (Recycling)
தலைப்பு : மழைக்காகிதங்கள் (Plastic papers)

தூக்குப் பை
பாலித்தீனால் ஆன தூக்குப்பைகள் (Carry-Bags), சமையல் பொருட்கள் வாங்கிய பைகளை எப்படியெல்லாம் திரும்பப் பயன்படுத்தி, நம் சுற்றுச்சூழலை மாசுபடாமல் காக்கலாம் என்று உங்கள் எண்ணங்களை, உத்திகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
அன்பினால் எதையும் சாதிக்கலாம்
 பொருள் :சூரிய கிரகணம் எனப்படும் ப.. 2009-07-21 10:15:13 
கணேஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-06-29 20:41:03
பதிவுகள்: 3
இடம்
மன்றம் : கண்டுபிடிப்புகள்
தலைப்பு : சூரிய கிரகணம் எனப்படும் பரிதி மறைப்பு

பொருள் :சூரிய கிரகணம் எனப்படும் பரிதி மறைப்பு

சூரிய கிரகணம் எனப்படும் பரிதி மறைப்பை நாசா அறிவியலாளர்கள் அசைபடமாகச்சித்தரித்துள்ளனர். பார்க்க படம்:

பரிதி மறைப்பு

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
அன்பினால் எதையும் சாதிக்கலாம்
 பொருள் :பதில்:பனித்துளிகள் கருத்.. 2009-07-21 08:49:09 
பு.க.ர. பிரபு
புதியவர்
இணைந்தது: 2009-07-19 11:02:51
பதிவுகள்: 1
இடம்: பெங்களூர்
மன்றம் : மன்ற அங்கத்தினர் அறிமுகம்
தலைப்பு : பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

பொருள் :பதில்:பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

வணக்கம் ஐயா,

          இப்படி ஒரு அருமையான இணையதளத்தைத் தந்ததற்காக முதலில் நன்றியைச் சொல்லுகிறேன்.

நீங்கள் தமிழுக்காக பலவற்றைச் செய்திருந்தாலும், மீண்டும் பனித்துளிகள் மூலம் தமிழன் என்பதை நிரூபித்துள்ளீர்கள். பனித்துளிகள் தளத்தின் அமைப்பும் அழகும் அருமை. ஒவ்வொரு பக்கத்தினை நான் பார்க்கும் போதும் அது எவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஓரளவு நானும் உணர்கிறேன்.       உங்கள் கனவு நிறைவேறியிருக்கிறது. எங்களுக்கு அதனால் மகிழ்ச்சி. எக்கச்சக்கமான கருத்துக்களையும் செய்திகளையும் இந்தத் தளத்தில் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

 

அன்புடன்

ஆர். பிரபாகரன்,

பெங்களூர்

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-07-21 08:49:09 , செய்தவர்: நிர்வாகி , காரணம்: தமிழாக்கம்
 பொருள் :பதில்:பனித்துளிகள் கருத்.. 2009-07-19 10:53:07 
சதீஷ் குமார்
புதியவர்
இணைந்தது: 2009-07-18 22:59:51
பதிவுகள்: 5
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  
மன்றம் : மன்ற அங்கத்தினர் அறிமுகம்
தலைப்பு : பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

பொருள் :பதில்:பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

எனக்கு உங்க சிஷ்யனா இருப்பது ரொம்ப பெருமையா இருக்குங்க ஐயா. நான் இது போல ஒரு தமிழ் இணையதளத்தைப் பார்த்தது இல்லை. உங்களின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகின்றேன்...

 

இப்படிக்கு,

என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்குத் தமிழன்”

CEO of ACME WebSoft Solutions

www.acmewebsoft.com

இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-07-19 10:53:07 , செய்தவர்: நிர்வாகி , காரணம்: சிறுபிழை நீக்கம்
என்னை பற்றி சொல்ல நான் ஒன்னும் பெரிய ”இவன்” இல்லை.
ஆனால் என்னை உலகம் அறிய பாடுபடும்
ஒரு ”கொங்கு தமிழன்”
 பொருள் :பனித்துளிகள் கருத்துக்கள.. 2009-07-02 18:09:01 
நிர்வாகி
நிர்வாகி
இணைந்தது: 2009-06-27 23:05:23
பதிவுகள்: 2
இடம்: கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மன்றம் : மன்ற அங்கத்தினர் அறிமுகம்
தலைப்பு : பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

பொருள் :பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!

பனித்துளிகள் கருத்துக்களத்துக்கு அனைவரும் வருக!. இங்கு உங்கள் கருத்துக்களைப் பதியவும், பரிமாறிக்கொள்ளவும் செய்யலாம்.
இணைய எண் எடுக்கப்பட்டுள்ளது
கடைசியாக மாற்றப்பட்டது:: 2009-07-02 18:09:01 , செய்தவர்: நிர்வாகி , காரணம்: தெரியவில்லை
பக்கம் #