தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)
உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)
நம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர்.
நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும் என்றே சொன்னார்கள். சனி ஞாயிறு கூட விட்டுவைப்பதில்லை அதையும் இந்த வேகமான உலகம் தூக்குத்தின்று துப்பிவிடுகிறது.
விவாகரத்துக்கள் அதிகரிக்க இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பணத்தின்மீதான மதிப்பு தேவைக்கு அதிகமாக ஆகிவிட்டதன் காரணமாகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் தன் மேலாளரிடம் தன் அக்கா திருமணத்துக்குச் செல்ல விடுப்புக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் திருப்பிக்கேட்டாராம் 'What the hell you are doing with your sister's marriage?' (உன் அக்காளின் திருமணத்தில் உனக்கென்ன வேலை!) என்றாராம். சரி நாம் கருத்துக்கு வருவோம். உறவுகள் பிரிவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம், (உங்களுக்கு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்)
இந்த வரிசை பெருகிக்கொண்டே போனாலும் சொல்லப்பட்ட காரணங்கள் மிக அதிகமாக உறவுகளைப் பிரிக்கும். உறவுகளைச் சேர்க்கும் பாலங்களாகப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.
இதில் அன்பையும் நேசத்தையும் கொஞ்சம் கலந்து கொள்ளவேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர்வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். எல்லா நண்பர்களும் உறவினர்களும் கூடியிருக்கும் போது, தான் கொண்டுவந்த பரிசை என் நண்பரின் உறவினர் ஒருவர் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தார். அவர் அந்தப்பரிசை கொடுப்பதை படம் எடுக்கச் சொல்லி ஒரே அடம். நண்பருக்கோ முகத்தில் வெறுப்புக் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. தான் அன்பைக் காட்டுகிறேன் என்று விளம்பரம் மட்டுமே செய்கிறார் அவர். கோவிலுக்குச் சென்றால் உபயம் இராமசாமித் தேவர், உபயம் சின்னசாமிக் கவுண்டர் என்று எழுதியிருப்பார்கள் குழல் விளக்குகளில் (Tube Lights). அதன் ஒளியையும் மறைக்கும் அளவுக்கு. ஒளி என்பது என் நண்பரின் உறவினர் காட்டும் அன்பென்றால் அந்த விளம்பரம் அவரின் அன்பை மறைக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை.
தொடரும்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 சூலை 2010 12:43)