தமிழ் இலக்கியத்தின் உறுப்புக்கள் எனப்படுபவை இயல், இசை, நாடகம் என அறிவோம். முன்னோர்கள் இவற்றைப் பயன்படுத்தித்தான் மக்களுக்கு அறிவு புகட்டினார்கள். ஆனால், அந்த நாடகத்தின் இன்றைய வடிவமான திரைப்படங்களின் பாடல்களைக் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஒலிக்கக் கூடாது என பல்கலைக் கழகங்கள் தடைசெய்யுமளவுக்கு கலை அழிவினை நோக்கிப்போயிருக்கிறதே?... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
பொக்கிஷம் - நேயர்விருப்பம்
சரவணன் என்கிற பனித்துளிகள் நேயர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சிலநாட்களுக்குமுன் வெளியான பொக்கிஷம் என்ற திரைப்படத்தினால் அவருக்குள் ஏற்பட்ட தாக்கத்தை எழுதியிருந்தார். அந்தப்படம் ஓடவில்லை (வியாபார நோக்கத்தில் வெற்றியடையவில்லை) என்று வருத்தப்பட்டிருந்தார். அந்த மின்னஞ்சலைக் கீழே காணுங்கள்.
பல நாட்களுக்கு பிறகு நேற்று எனக்கு படம் பார்க்க நேரம் கிடைத்தது... நான் பார்த்த படம் "பொக்கிஷம்"... எனக்குள் ஒரு தவிப்பு, இப்படி ஒரு படம் ஏன் ஓடவில்லை என்று. இப்படி பட்ட படத்திற்கு ஏன் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று.. அந்த ஏக்கத்தின் பலன் தான் இந்த மடல் .ஒரு அழகான கவிதை படித்த உணர்வு எனக்கு . அதில் இடம்பெற்று இருந்த ஒரு பாடல் "நிலா நீ வானம் காற்று மழை" என்ற படலை தயவு செய்து கேளுங்கள், அந்த வரிகளை இந்த மடலில் சேர்த்து உள்ளேன். அங்கிகரிக்க படாத இந்த படத்தை தயவு செய்து உங்கள் வலை பகுதியில் விமர்சனம் செய்யுங்கள்... கமர்ஷியல் வரிசைகளில் இப்படிபட்ட கவிதைகள் நசுங்குவது மிகுந்த வேதனை அளிக்கிறது.என்னை போல் கதை விரும்பிகளின் ஏக்கங்கள் என்று தீரும் என்று தெரியவில்லை. உங்களின் விமர்சினதிற்கு காத்திருப்பேன்..
இப்படிக்கு,
சரவணகுமார், கோவை
இதற்காக இந்தத் திரைப்படத்தை மெனக்கெட்டுப் பார்த்து தோல்விக்கு என்ன காரணம் என்று ஒரு முடிவுக்கு வந்தேன். சரவணனுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் புவி இந்தத் திரைப்படக் கதையின் காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தில் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அன்று நடந்த ஒரு இளைஞனின் மனப்போராட்டத்தையும், அவன் காதலில் காதலியின் தந்தையிடம் எப்படி ஏமாந்து அவளைப் பறிகொடுத்தான் என்கிற கதை. தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடந்த இந்தக் கதையில் கடிதம் எழுதி எழுதிப் படத்தை இழுத்துக் கொண்டுபோகிறார்கள். கிட்டத்தட்ட இதே கதை அமைப்புக்கொண்ட ஆட்டோகிராப் படத்தில் சேரன் சொல்லியிருந்த பக்குவம், எழில் இந்தப் படத்தில் அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பார்க்கும் நேயர்களைப் படத்தில் ஒன்றியிருக்க வைக்கத் தெரியாததால் படம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
கலை அமைப்பு மற்றும் ஒளிப்பதிவு மிகவும் அருமை. சபேஷ் முரளியின் இசை மெல்லிசையாக இருந்தால் மட்டும் போதாது ஒரு நோக்கம் (Theme) இருக்கவேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. பாடல்கள் கூட, முக்கியமாக நமது சரவணன் சொல்லியிருந்த "நிலா நீ காற்று" என்ற பாடல் அழகான வார்த்தைகளின் கோர்வை ஆனால் கருவே இல்லாத பாடல்கள். இன்றும் பல கவிஞர்கள் ஏதோ அழகான வார்த்தைகளைப் போட்டு எழுதினால் மக்கள் விரும்புவார்கள் என்று எழுதப் பழகியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பாடல்களின் தோல்வி ஒரு சாட்டையடி. சும்மா ஏதாவது சொற்சிறப்புக்கள் போதாது உட்கரு இருக்கவேண்டும்.
சுருங்கச் சொன்னால் பாடல்களின் வரிகளில் சொற்சுவை இருக்கிறது ஆனால் பொருட்சுவை இல்லை.
உதயமூர்த்தி அவர்களின் பெயரில் திரைக்கதையைப் பார்த்துப் பார்த்து எடுத்த உன்னால் முடியும் தம்பி படத்தைப் பாருங்கள் சரவணன். குணா படத்தைப் பாருங்கள் சரவணன் இவைகளில் இருக்கும் ஒரு மன ஈர்ப்பு இப்படத்தில் இருக்கவில்லை.
அதுபோக படத்தின் வரிக்குறைப்புக்காகப் பெயரில் தமிழைப் பயன்படுத்திவிட்டு, "ஹலோ மிஸ்டர் கந்தசாமி ஒரு காஃபி குடிப்போம் கம் வித் மி" என்று ஆங்கிலத்தை தமிழுடன் கலப்படம் செய்யும் கவிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் கபோதிகள் இருக்கும் இந்த திரைத்துறையில் இப்படம் வெற்றிபெறவில்லை என்று புலம்புவது வீணான வேலை. விட்டுவிடுங்கள்.
என்னில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.
பாடலின் வரிகள்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்தேவதை அன்னம் பட்டாம் பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சைஇதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்காஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிடநிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்அன்புள்ள மன்னா அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2009 09:13)
நீங்கள் சொல்லும் குணா படம் நான் விரும்பும் மிக சிலவற்றில் ஒன்று.ஆனால் அந்த படத்தை ஏன் மக்கள் ஏற்று கொள்ளவில்லை? வர்த்தகரீதியாக அது வெற்றி பெறவில்லை என்பது உண்மை.இந்த(பொக்கிஷம்) படத்தில் இவர்களின் காதலை உருவாக்கியதே நான் "தமிழ்" என்றுதான் சொல்லுவேன்..
"காதல்" என்பது பாடலின் பொருள், காதலி பற்றி வருணிக்க பொருட்சுவை எதற்கு? கண்ணே கலைமானே என்று கண்ணதாசனும், காதல் ரோஜாவே என்று வைரமுத்து அவர்களும் என்ன பொருளை கொடுத்தார்கள்? ஒப்பிட்டு எழுதப்பட்ட அந்த படலை பிடிக்காதவர்கள் உண்டா ?
"நேயர்களை ஒன்றி இருக்க தெரியவில்லை" என்று ஒரு வரி விமர்சனுமமும் படித்தேன், நேயர்கள் ?- அன்பே சிவம், ஹேராம் போன்ற படத்தை ஒதுக்கிய நேயர்களை பற்றியா சொல்லுகிறேர்கள்?? கில்லி, அந்நியன், சிவாஜி போன்ற குப்பை படங்களை வெற்றி பெற வைத்த நேயர்களை பற்றியா??
சமிபத்தில் வந்த கந்தசாமி படத்தில் "Excuse me" படலை கூட நான் ஏற்று கொள்வேன், ஆனால் அதே படத்தில் "Meow Meow" என்ற பாடல இன்றைய சமுதாயத்திற்கு இன்றியமையாதது?? படத்தின் கதாநாயகன் விக்ரம் ஒரு தொலைகாட்சி பேட்டியில் சொல்கிறார் " இந்து குழந்தைகள் அவசியம் கேட்க வேண்டிய பாடல என்று "... உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தை அந்த பாடல் வரிகளின் அர்த்தம் கேட்டால் போதும், பதில் சொல்ல முடியாமல் நாக்கு துவர்த்து விடும்..
எதுவாக இருப்பினும் சேரன் போன்ற படைபாளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எளிமையும், இயல்பையும் மற்றுமே நம்பும் சேரன், பாலா போன்ற படைபாளிகள் இந்த படவுலகத்திற்கு தேவை. அடுத்த தலை முறையிடம் செல்லாது "கமர்சியல்".. கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் அரசியலாக இருந்தாலும் சரி..
உங்கள் பொன்னான நேரத்தை நான் உபயோகிதற்கு என்னை மன்னிக்கணும்.. என்னுடைய குமுறல்களுக்கு இந்த வலைத்தளத்தில் ஒரு இடம் கொடுத்தற்கு நன்றி..
உங்கள் மாணவன்,
சரவணன்