கல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்

கல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்

Apr 30, 2013

பாடத்திட்டம் (Syllabus) என்றவுடன் மெட்ரிகுலேஷன் அல்லாதது, ஆங்கிலோ இந்தியன், தமிழ்நாடு பாடத்திட்டம் எல்லாம் ஒழிந்து சமச்சீர் கல்வி என்பதைப் பற்றிமட்டும் நீங்கள் நினைக்கலாம். உண்மை என்னவென்றால் இது தமிழ்நாட்டுக்குள் மட்டும் இருந்த வேறுபாடு. அண்டை மாநிலங்களில் இருக்கும் மாநில பாடத்திட்டத்தில் வேறுபாடு கிடையாது.

இங்கே நான் அனைத்துப் பாடத்திட்டங்களையும் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கிறேன். உங்களில் தேவையானவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

மாநில பாடத்திட்டம் – சமச்சீர் கல்வி

இப்போது சமச்சீர் கல்வி எனபது மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், மாநில பாட திட்டத்தில் இருந்த பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இருக்கும் பள்ளிகள் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தமிழ் வழி, ஆங்கில வழி என்று இரண்டு மொழிகளில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கின்றன. புதிதாக அறிமுகப்படுத்தபட்ட இந்தப் பாடங்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் புதுமையாகவும் இருக்கின்றன. இந்தப் புதிய பாடத்திட்டங்களும் கொடுப்பது மீண்டும் ஏட்டுக் கல்விதான். தமிழ்நாட்டில் மட்டுமே வசிக்கும் தாய்மொழி வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் உண்மையில் பயனடைவார்கள். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரம் பாடத்திட்டதிற்கு ஏற்ப இல்லை என்ற குற்றசாட்டு இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகளை ஒழித்துவிட்டதால் சமச்சீர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கே அதிக வாய்ப்புகள் இருகின்றன.

அதிக மதிப்பெண்களைப் பெறவும், தமிழ்நாட்டிலிருக்கும் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு இந்த கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு மிக அதிகம்.

வரவேற்கத்தக்க சிறப்பியல்புகள்

முப்பருவ முறை (Trimester), புத்தகங்களின் சுமையை குறைக்கிறது. Continuous & Comprehensive Evaluation (CCE) எனப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையானது தேர்வின்போது  மாணவர்களுக்கேற்படும் அச்சத்தைக் குறைக்கிறது. இதில் மதிப்பெண்களுக்கு பதிலாக தரமதிப்பிடுதல் வரவேற்கப் படவேண்டிய ஒன்று.

முப்பருவப் பாடமுறை பற்றிய தமிழகஅரசின் இணைய விளக்கப் பக்கம்

 

மத்திய கல்வி பாடத்திட்டம் (CBSE – Central Board Of Secondary Education)

இந்தியா முழுக்க மிக பிரபலமான ஒரு பாடத்திட்டம். அடிக்கடி இந்தியாவெங்கும் வேலைக்கு இடமாற்றம் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லுவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ள சரியான பாடத்திட்டம். இங்கும் இப்போது படிபடியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுவருகிறது. பத்தாவது பொது தேர்வு முறை மாற்றப்பட்டு மதிப்பிடும் முறையும், மதிப்பெண்கள் பதிலாக தரங்கள் கொடுக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. அதிகமாக இந்திய அளவில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதில் பயன்பெறுவர். இந்த முறையில் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஆனால் பத்தாவது வரை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளினால், பத்தாம் வகுப்பு வரை எளிமை படுத்தபட்ட பாடத்திட்டம்.

மத்திய கல்வி பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே!

இந்திய மேல்நிலை மற்றும் உயர்நிலைச் சான்றிதழ் கல்விப் பாடத்திட்டம் (ICSE – The Indian Certificate of Secondary Education and
ISC – Indian School Certificate)

இதுவும் இந்தியா முழுமைக்கும் ஒரே முறை என்றாலும் அதிகபடுத்தபட்ட பாடங்கள் உண்டு. முக்கியமாக இந்த பாடத்திட்டத்தில் ஆங்கில மொழி சிறப்பாக சொல்லி தரப்படும். பத்தாவது வரை ICSE என்றும், பிறகு ISC என்றும் இருக்கிறது. இதில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்தபட்டவிருப்ப பாடங்களை படிப்பது ஒரு வசதி. இது அரசாங்கம் நடத்தாத ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடத்திட்டம்.இந்தியா முழுமையும் பள்ளிகள் இருந்தாலும் மதிப்பெண்கள் அதிகம் பெறமுடியாத ஆனால் அருமையான பாடத்திட்டம்.

இந்திய மேல்நிலை மற்றும் உயர்நிலைச் சான்றிதழ் கல்விப் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே!

 

திறந்தநிலை பள்ளி கல்வி (NIOS – National Institute Of Open Schooling)

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி வழங்க சீரிய நோக்கோடு கொண்டு வந்தது. இதை பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. படிக்காதவர்கள் கூட அஞ்சல் மூலம் அல்லது பயிற்றிடங்கள் மூலம் பாடங்களைக் கற்றுத் தேர்வெழுதலாம். இது ஏறக்குறைய மத்திய அரசு பாடத்திட்டத்தை சார்ந்து இருந்தாலும் தேர்வு முறை கொஞ்சம் எளிது. ஆனால் பாடத்திட்டம் அவ்வளவு எளிதல்ல. இதில் தேர்ந்து எடுக்க நிறைய விருப்ப பாடங்கள் இருப்பது மிக்கச் சிறப்பு. இது இந்தியா முழுக்க அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாட்திட்டமாகும். வெளிநாட்டு மேல் படிப்பிற்கான தகுதி இதில் பயின்றவருக்கு எந்த அளவுக்கு இருக்குமென்று உறுதி கிடையாது. ஆனால் பள்ளி செல்லாமலையே படிக்க அருமையான் வாய்ப்பு கொடுக்கும் பாடத்திட்டம். சிறிது சிறிதாக பிரபலமாகி வருகிறது. மாற்று பாடம் உள்ள பள்ளிகள் இந்த தேர்வுக்கு மாணாக்கர்களை தயார்படுத்துகின்றன. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வயது குறைந்தபட்ச பதினைந்து. சிறப்புப் பள்ளிகளில் பெரும்பாலும் இந்த பாடமுறைக்கே தயார் படுத்துவார்கள்.

திறந்தநிலை பள்ளி கல்விப் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே!

 

கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் (IGCSE – Cambridge )

இப்போது முளைத்து வரும் இண்டர்நேஷனல் பள்ளிகளில் பெரும்பாலும் இங்கிலாந்தை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இது சிறப்பான பாடத்திட்டமாக இருந்தாலும் மிக்க அதிக தொகை கட்டி படிக்க வேண்டி வரும். இலட்சகணக்கில் வருட பள்ளி கட்டணம் கட்ட வேண்டும். எனக்கு தெரிந்து வருடத்திற்கு மூன்றில் இருந்து பத்து லட்சம் வாங்கும் பள்ளிகள் உள்ளன. விருப்ப பாடங்கள் தேர்வு மட்டுமே 70க்கு மேல் இருக்கின்றன. மாணவர்களுக்கு எந்த பாடம் விருப்பமோ அதை மட்டும் எழுதலாம். கணிதம் வராத மாணவன் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத இந்திய சூழலில் எந்த மேல்படிப்பு வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல விருப்ப பாடங்கள் படிக்கலாம்.இது ஒரு அருமையான முறை. புரியும் விதத்தில் அமைந்த பாடத்திட்டங்கள் இதன் சிறப்பு.ஆனால் இந்திய கல்வி முறையின் சூழலும் இந்த சூழலும் மிகவேறுபட்டவை. இங்கும் தனியாக மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். வீட்டுக் கல்வி கற்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு துறை அல்லது கலை துறையில் இருப்பவர்களுக்கு நன்கு பொருந்தும். தனி தேர்வுக்கு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை. இந்தியா உட்பட புவி முழுதும் ஏற்றுகொள்ளப்பட்ட பாடத்திட்டம்.

 கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே!

ஐ.பி.முறை (IB – International Baccalaureate)

இந்த பாடத்திட்டமும் உலகெங்கும் வளர்ந்து வரும் பாடத்திட்டம். இதுவும் இண்டர்நேஷனல் பள்ளிகள் எனப்படும் பன்னாட்டுப் பள்ளிகள் மூலம் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டத்தை விட இதற்கு கட்டணம் அதிகம்.மிக அருமையான பாடத்திட்டம். இதற்குச் சிறந்த உட்கட்டமைப்புகள்  தேவைப்படும். புவி முழுதும் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம். வெளிநாட்டில் போய் படிக்க இந்த பாடத்திட்டம் ஓரளவுக்கு உதவும். கட்டணம் அதிகம் என்பதால் பள்ளிகள் குறைவு.

 

ஐ.பி. பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே!

 

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் (National Curriculum for Higher Secondary Students)

இன்னொரு முக்கிய செய்தி. இப்போது இந்தியா முழுமையும் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் ஒரே பாடத்திட்டம் அமைய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதை National Core Curriculum என்றழைக்கிறார்கள். இது மதிய அரசு பாடத்திட்டத்தில் உள்ள பாடநூல்களை மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்க பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் இது ஏற்று கொள்ளபடவில்லை. ஆனால் கர்நாடக உள்பட ஆறு மாநிலங்களில் இந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அனைத்திந்திய நுழைவு தேர்வு எழுத அம்மாநில மாணாக்கர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தியா முழுமைக்கும் சிறிது வருடங்களில் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு எங்கு,எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும் ஒரே பாடங்கள்தான் இருக்கும்.வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

இந்திய அரசால் சான்றுரைக்கப்பட்ட பாடத்திட்டங்கள்

  • ஆந்திர மாநில மேல்நிலைக்கல்வி ஆணையம் – Andhra Pradesh Board of Secondary Education
  • ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி ஆணையம் – Andhra Pradesh Board of Intermediate Education
  • அஸ்ஸாம் உயர்நிலைக் கல்விக் குழுமம் – Assam Higher Secondary Education Council
  • அஸ்ஸாம் மேல்நிலைக் கல்வி ஆணையம்- Assam Board of Secondary Education
  • மத்தியப் பிரதேச மேல்நிலைக் கல்வி ஆணையம் – Board of Secondary Education, Madhya Pradesh
  • மத்திய பாரத் சாந்தி நிகேதன் மேல்நிலைக்கல்வி ஆணையம் – Board of Secondary Education, Madhya Bharat Shanti Niketan Satya Dev Nagar Gwalior (M.P.)
  • பீகார் பள்ளித் தேர்வாணையம் – Bihar School Examination Board
  • பீகார் இடைநிலைக் கல்விக் குழுமம் – Bihar Intermediate Education Council
  • மத்திய மேல்நிலை கல்வி ஆணையம் – Central Board of Secondary Education
  • இந்திய பள்ளிக் கல்விச் சான்றிதழ்த் தேர்வாணையம் – Council for the Indian School Certificate Examination
  • சட்டீஸ்கர் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Chhattisgarh Board of Secondary Education
  • கோவா மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி ஆணையம் – Goa Board of Secondary & Higher Secondary Education
  • குஜராத் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Gujarat Secondary Education Board
  • அரியானா கல்வி ஆணையம் – Haryana Board of Education
  • இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி ஆணையம் – Himachal Pradesh Board of School Education
  • ஜம்மு காஷ்மீர் மாநில பள்ளிக் கல்வி ஆணையம் – J&K State Board of School Education
  • கர்நாடக மேல்நிலைக் கல்வித் தேர்வாணையம் – Karnataka Secondary Education Examination Board
  • கர்நாடக பல்கலைக்கழகத் தகுதிக் கல்வி ஆணையம் – Karnataka Board of the Pre-University Education
  • கேரள பொதுத் தேர்வாணையம் – Kerala Board of Public Examinations
  • திருவாங்கூர் ஆங்கிலக் கல்வித் தேர்வுச் சான்றிதழ் – English School Leaving Certificate Examination Travancore
  • மகாராஷ்ட்ர மாநில மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி ஆணையம் – Maharashtra State Board of Secondary and Higher Secondary Education
  • மணிப்பூர் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Manipur Board of Secondary Education.
  • மணிப்பூர் உயர்நிலைக் கல்விக் குழுமம் – Manipur Council of Higher Secondary Education
  • மேகாலய பள்ளிக் கல்வி ஆணையம் – Meghalaya Board of School Education
  • மிசோரம் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Mizoram Board of School Education
  • நாகாலாந்து பள்ளிக் கல்வி ஆணையம் – Nagaland Board of School Education
  • தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் – National Institute of Open Schooling
  • ஒரிசா மேல்நிலைக் கல்வி ஆணையம் – Orissa Board of Secondary Education
  • ஒரிசா உயர்நிலைக் கல்விக் குழுமம் – Orissa Council of Higher Secondary Education
  • பஞ்சாப் பள்ளிக் கல்வி ஆணையம் – Punjab School Education Board
  • ராஜஸ்தான் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Board of Secondary Education, Rajasthan
  • தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி ஆணையம் – Tamil Nadu Board of Secondary Education
  • தமிழ்நாடு உயர்நிலைக் கல்வி ஆணையம் – Tamil Nadu Board of Higher Secondary Education
  • திரிபுரா மேல்நிலைக் கல்வி ஆணையம் – Tripura Board of Secondary Education
  • உத்தரப்பிரதேச உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி ஆணையம் – Uttar Pradesh Board of High School and Intermediate Education
  • மேற்குவங்க மேல்நிலைக் கல்வி ஆணையம் – West Bengal Board of Secondary Education

 

தொடரும்!…

The following two tabs change content below.

கிருத்திகா தரன்

நல்ல ஒரு சிந்தனையாளர் மற்றும் வலைப்பதிவர். கல்வியியல் ஆராய்ச்சிகள் நிறைய செய்து கட்டுரைகளாக வெளியிடுகிறார். இவரது சேவை பள்ளிக்கல்விக்குத் தேவை!

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>