கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

கடவுள் பற்றிய (விதண்டா)வாதங்கள்

Jan 8, 2013

இருக்கிற தென்பவனும்
இல்லை யென்பவனும்
நிலைநிறுத்த விரும்பும் ஒன்று 
அது அவர்தம் வாதத்தில் வெற்றி!

இதில் இருவர் உணர்வுகளும்
காலில் மிதிக்கப் படுகின்றன.

இருக்கிறதென்று நம்பிக்கை 
கொள்கிறவரில் பெரும்பாலானோர்
ஆன்மீகத்திலிருக்கும் பல மூட நம்பிக்கைகளை 
விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை!…

தலையில் தேங்காய் உடைப்பவரைப் பார்த்தால்
“அடச் சே… என்ன இது முட்டாள்தனமாக இருக்கிறதே” 
என்று வெறுக்கவே செய்கிறார்.

மண்சோறு தின்பவரையும், கோயில்களில் சிறப்புவழிபாட்டு (Special entrance) முறையையும் எரிச்சலுடந்தான் பார்க்கிறார்கள்.

பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படின் பக்தர்கள் எவரும் எதிர்க்கப் போவதில்லை!… மாறாக மனைவியையும் அழைத்துக் கொண்டு போகத்தான் செய்வார்கள். 

இன்னும் பலருக்குத் தெரியாது புராணத்தில் ஐயப்பனுக்குத் திருமணம் ஆனது!… அது வேறு கதை!

நான் முன்னமே சொன்னதுபோல அவலநிலைகள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன. அரசாங்கத்தில் குழப்பங்கள், லஞ்சம், ஊழல் மற்றும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப் படல் இப்படி ஏராளம் இங்கே உண்டு கோளாறு. 

ஒருபக்கம் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவைகளான எரிபொருட்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றுக்கான தட்டுப்பாடுகள் அதிகமாகிக் கொண்டிருக்க அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு மனித மூச்சுக் காற்றை நிறுத்தப்பார்க்கிறது.

கல்விமுறையில் உள்ள கோளாறுகளால் நம் குழந்தைகள், சகோதர சகோதரிகள் தடம்புரண்டு ஓடிக் கொண்டிருகிறார்கள். பண்பாடு இதனால் சீர்கெட்டு, கொலை, கொள்ளை, தற்கொலை, கற்பழிப்பு மற்றும் வேறென்னவெல்லாம் சமூகக்கேடு உண்டோ அதுவெல்லாம் பல்கிப் பெருகிவிட்டது!…

இன்னொருபக்கம் இருக்கும் நமது சக தலைமுறையே வயிற்றுப் பாட்டுக்கு அடித்துக்கொண்டிருக்கும் போது அடுத்த நூற்றாண்டுக்குப்பின் வரும் தலைமுறைக்காக சேர்த்துவைத்துச் சாகும் சுயநலம் எல்லா இடத்திலும் பெருகி சமத்துவம் சவம் ஆகிவிட்டிருக்கிறது!…

இப்படி முடிவிலா பட்டியல் நீள, இதெல்லாம் தவிர்த்து சிலருக்கு எதுக்கும் முக்கியத்துவம் குடுக்கணும்னே தெரியல… கேட்டா அதுக்கு லாஜிக்கே இல்லாமல் ஒரு விளக்கம் கிடைக்குது. நீ ஏன் அங்கே பொட்டுவெச்சு கும்பிடறே…. நீ ஏன் கோயிலுக்குப் போறே… அது சமூகக் குற்றம்னு கன்னாபின்னான்னு குறுக்குவெட்டுத் தோற்றத்துல படம் போட்டு விளக்கம் குடுக்கறாங்க!…

இவர்கள் வாதத்திறமை மேலே சொன்ன சமூகச் சீர்கேடுகளை சரியாக்கப் பயன்படுமேயானால் மனிதம் உன்னதம் பெரும். போராட்ட குணமுள்ள சிறந்த சிந்தனையாளர்கள் இவர்கள்… இப்படிப் பட்டவர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் காலமிது.

இவர்களிடமிருக்கும் மனிதவளம் மற்றும் மனவளம் வீணடிக்கப் படுவதே கொடுமையிலும் கொடுமை..

இவங்க கிட்ட நாம் கேட்பது இதுதான்…. நமது நாடு முன்னேற வழி ஏதாவது சொல்லுங்க செய்யுங்க….

நாடு முன்னேறணுமா? அப்ப கடவுளை ஒழியுங்கன்னு சொன்னா கடுப்பாயிடுவேன்…. 

இல்லாத ஒண்ணை ஒழிக்கச் சொல்றது மட்டும் முட்டாள் தனமில்லையா?

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>