தமிழின வரலாறு (பாகம் 3) - ஆரியப் படையெடுப்பு

போலார் ஷிஃப்ட் எனப்படும் கண்டச் சுழற்சி ஒரு புவியியலில் கண்டறியப்பட்ட ஒரு உண்மை. ஆதாவது, இப்போது அண்டார்டிகா உள்ள பகுதி புவியின் நடுப்பகுதியாகவும், தற்போது நடுப்பகுதியாக நாம் வாழும் கண்டங்கள் அப்பொழுதெல்லாம் துருவப்பகுதியாகவும் இருந்திருக்கின்றன. பிறகு புவிச் சுழற்சி மாற்றத்தில் இப்படி மாறுபட்டுப் போய்விட்டதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குமரிக்கண்டத்தின் பகுதிகளாக இருந்த தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியாவின் தெற்குப்பகுதி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா புவியியல் மாற்றத்தால் கழன்று போய் வேறிடங்களில் சேர்ந்துகொள்ள எஞ்சியிருந்த தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கு ஒட்டிக்கொண்டு போய்விட்டது.

அப்போதுதான் சிந்துசமவெளி நாகரீகம் உருவாக தமிழர்கள் காரணாமாக இருந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் அவர்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள் என்று அகழ்வாராய்ச்சியில் (ஹரப்பா, மொகஞ்சாதாரோவில்) கண்டறியப்பட்டன. இதை நாமும் பல நூல்களில் (நம் பள்ளிப்படிப்பில் இடம்பெற்ற வரலாற்றுப் புத்தகம் உட்பட) படித்தறிந்துள்ளோம்.

(கருத்தில் கொள்க: இது ஒரு பிரிவினரினருக்கு எதிரான தொடர் அல்ல, தமிழினத்தின் சிறப்புத்தன்மைகளைக் கோடிட்டுக் காட்டி நாம் மீண்டும் அந்தச் சிறப்பியல்புகளைத் திரும்ப வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் தொடராக அமையவேண்டுமென்று எழுதப்பட்டது. பிறரைப் புண்படுத்துவது நம் நோக்கமல்ல. வரலாற்றில் வரும் சில உண்மைகள் மனக்கசப்பைத் தரத்தான் செய்யும். ஆனால் நடந்துமுடிந்த நிகழ்வுகளுக்கு, இப்போது நிகழ்நேரத்திலிருக்கும் யாரையும் பொறுப்பாகக் குற்றம் சாட்டமுடியாது, அதை நாம் செய்யப் போவதுமில்லை. மேலும்

(இந்தத் தொடரை மேலும் படிப்பதற்கு முன் இந்தியாவின் மீது படையெடுத்துவந்த ஆரியர்கள்தான் தற்போது நமது நண்பர்களாக, உறவினர்களாக இருக்கும் பிராமணர்கள் எனும் சாதியினர் என்றொரு கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறென்று கொண்டு பின் தொடர்ந்து படிக்கவும். ).

அதுவரை தமிழினம் பின் வரும் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்திருக்கிறது.

  1. சாதிகளே இல்லாத சமநிலை வாழ்வின்பம் கண்ட இனமாக.
  2. பெண் மற்றும் ஆண்கள் அனைவரும் சமநிலையுடன்
  3. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய விதத்தில்
  4. பண்பாட்டில் சிறந்து, பிறரைப் புண்படுத்தாத வாழ்க்கைமுறையில்

நான்காவது மற்றும் மூன்றாவது பண்புகள்தான் நாம் பண்டைத் தமிழ் வாழ்வை விட்டு தூக்கி எறியப்பட்டுவிடக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆம்!… வந்தாரை வாழவைக்கும் வையகக் குடியான தமிழ்க்குடி என்று படித்திருப்போம் அது உண்மைதான். தமிழன் எங்கு சென்றாலும் அவன் திறமையால் வெல்லும் பலதுறைச் சீமானாக விளங்கக் காரணம் பண்டைத் தமிழினத்தில் இருந்து அவன் பெற்ற ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் தான் காரணமாக இருக்க முடியும். இதன்மூலம் தமிழனின் 3வது சிறப்பியல்பும் உண்மைதான் என நம்மால் உணரமுடிகிறதல்லவா?

இரண்டாவது பண்பை உண்மையெனக் கூற நிறைய ஆதாரங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, “மணி மணியான சொற்கள்”, “மணிமணியான எழுத்துக்கள்” என ‘மணி’ என்கிற சொல்லை நாம் எல்லா சிறந்தவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தியிருக்கிறோம். இந்த மணி என்ற சொல்லின் தோற்றம், தமிழனின் தாய்த் தொழிலான விவசாயத்திலிருந்து வந்தது. அறுவடை செய்த நெல்மணி, விதக்கும் விதைகளை விதைமணி என தமிழன் அழைத்ததன் நோக்கம் அது அந்தந்த இடங்களில் மிகவும் இன்றியமையாத இடம் பெற்றிருப்பதால், கண்மணி என்று கூறுவதன் நோக்கமும் கண் இன்றியமையாத ஒரு உறுப்பு என்பதால்தான். ஒரு பெண்ணை தமிழன் பெண்மணி என்று அழைத்தான் (ஆனால் ஆணை ஆண்மணி என்று அழைக்கவில்லை என்று நினைவில் கொள்க). பெண்களின் தலைமையும், வழிநடத்தலும் பாடுபடும் விவசாயி முதல் ஆளும் அரசன் வரை இருந்திருக்கிறது. மனித வாழ்வில் பெண்ணின் பங்களிப்பை முன்பே உணர்ந்திருந்த ஒரே இனம் தமிழினம்தான்.

சிலப்பதிகாரத்தின் வாயிலாக ஒரு அரசனின் முன் சென்று கேள்விகேட்டு நீதியை நிலைநாட்டும் உரிமை பெண்ணுக்கும் இருந்ததை நாம் அறிந்திருப்போம். ஔவையார் போன்ற தமிழ்ப் புலவர்கள் போற்றப்பட்டதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

உண்மையில் இத்தகைய சிறப்புகளைத் தமிழன் இழக்க ஆரம்பித்தது ஆரியர்களின் வருகையால்தான். அவர்கள் உண்மையில் மொகலாயர்கள் போர்ப்படையுடன் வந்தது போலவோ ஆங்கிலேயர்கள் போல தொழில் வணிகர்களாகவோ வரவில்லை. தமிழின மன்னர்கள் கலை இலக்கியப் பணிகளில் சிறந்து விளங்கிவந்தார்கள். சமஸ்கிருதம் என்ற சிறப்பான மொழியில் புலமை பெற்றிருந்த ஆரியர்கள் ஆங்காங்குள்ள பெரு மற்றும் குறு நிலங்களை ஆளும் மன்னர்களிடம் வேதங்கள் பற்றியும் வித்தைகள் பல செய்தும் அவர்கள் இதுவரை அறிந்திராத கதைகளைப் பெருமை பொங்க எடுத்துக் கூறியும் அரண்மனை மற்றும் அரசாங்கச் செயல்களில் தங்களின் இடத்தைப் பெற்றுவிட்டார்கள்.

நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள் என்றால் அதை அப்படியே இன்னொருவர் எதிர்த்தாலோ அல்லது மாற்றிச் சொன்னாலோ அதை நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். மேலும் “நீங்கள் சொன்ன கருத்து உண்மைதான் சிறப்பாகச் சொன்னீர்கள். ஆனால் பாருங்கள்.., இந்த உண்மையின் மற்றொரு பக்கம் இதுதான்.. எனவெ, இதுவும் உண்மைதான்” என்கிற முறையில் ஆரம்பித்து அவர்கள் செய்தியைத் திணித்துப் பின் முழுக்க அவர்கள் கருத்தை நிலை நாட்டிக்கொண்டால் நீங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் உணராமலே உங்கள் தோல்வியை நீங்கள் தழுவிக்கொள்வீர்கள். இது உளவியல் வழி உண்மை.

உண்மையில் சிவன் என்ற சொல் சிவப்பு என்ற நிறத்தைக் குறைக்கும் தமிழ் சொல்லினை ஆதாரமாகக் கொண்டதுதான். தமிழர்கள் வாழ்வில் ஆரியர்கள் வருகைக்கு முன் ஆதவனை வழிபடும் முறை இருந்து வந்தது. இது கிட்டத்தட்ட இசுலாமியரின் உருவமற்ற வழிபாட்டு முறையினைப்போலவாகும். தமிழருக்கு இறைவழிபாட்டில் நாட்டமிருந்துள்ளதற்கான ஆதாரங்கள் சங்கப்பாடல்களில் தெளிவாகிறது.

முழுக்க முழுக்க ஆரியர்களால்தான இப்போதுள்ள இறைவழிபாடுகள் புகுத்தப்பட்டன என்பது எள்ளளவும் உண்மையில்லை. அதற்குமுன்னரே இயற்கையினை வழிபட்டுவந்தவர்கள் தமிழர்கள். முக்கியமாகச் சூரியனை வணங்கி தன் செயலைத் துவங்குவது தமிழரின் மரபாக இருந்துவந்துள்ளது. அது முழுக்க முழுக்க உருவமற்ற வழிபாடாகத்தான் இருந்திருக்கவேண்டும். சிவந்த பொற்கரங்களை ஆதவன் நீட்டி காலையில் உதித்து வருகையில் அந்த உருவத்தின்மேல் மனமகிழ்வுடன் தமிழர்கள் வணங்கினார்கள். அதற்கு சிவம் (சிவப்பு நிறத்தைக் குறிப்பது) என்ற பெயரும் அதனால்தான் தோன்றியிருக்கிறது. பின் நிலத்திலிருந்து புவியியல் மாற்றங்களால் தானாக வளர்ந்துவரும் கல்லின் (லிங்கம்) தோற்றத்தினைக் கோயில் கட்டி வணங்க ஆரம்பித்தார்கள். சிவனுக்கு உருவமில்லாதொரு உருவம் கொடுக்கப்பட்டு வணங்கப்படலானது. பெண்ணுக்கும் சமவுரிமையும் மதிப்பும் இருந்ததால் சிவனானவன் ஆண்பாலும் பெண்பாலும் இணைந்த அம்மையப்பனாக வணங்கப்பட்டான்.

ஆனால் மனித உருவமல்லாத வழிபாட்டில் ஆங்காங்கு இருந்துவந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாமலிருந்து வந்தன. ஆரியர்கள் அந்த வெற்றிடங்களோடு அவர்களின் நம்பிக்கையையும் ஒப்பிட்டு அந்த இடங்களை நிரப்பினார்கள். ஆதாவது சிவனுக்கும் உருவம் கொடுத்தும் சிவனுக்கு உறவு பெருமாள் என்று சொல்லியும் பெருமாளுக்கு மனைவி இலக்குமி, சிவனுடைய மனைவி பார்வதி அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒருவன் கணேசன் மற்றொருவன் முருகன் என்றெல்லாம் சொல்லியும் இயலிசை நாடகங்களின் வாயிலாக, அந்த வெற்றிடங்கள் கச்சிதமாக நிரப்பப்பட்டன. அதுவரை உருவமில்லாமல் வணங்கிவந்த சிவனுக்கு உருவம் கொடுக்கப்பட்டது அப்போதுதான். புலித்தோல் அணிந்த மனித உருவமாகவும் நடனமாடும் நடராசராகவும் மக்கள் அதிகம் அச்சம் கொள்ளக்கூடிய அல்லது அன்புசெலுத்தக் கூடிய விலங்கினங்கள் இறைவனைச் சுற்றிப் புனையப்பட்டு அவற்றிற்குரிய பாத்திரங்களை ஏற்றுக்கொண்டன. பாம்பும், பசுவும் இறைவனோடு சேர்ந்தது அப்போதுதான். பிறகுதான் வேறுபாடுகள் முளைவிடத் தொடங்கின.

உருவம் அளிக்கப்படாமல் இருந்தவரை இருந்துவந்த மக்கள் ஒற்றுமை, இறைவனுக்கு உருவம் அளிக்கப்பட்டதும் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படலானது. சிவனை வணங்குபவர்கள், பெருமாளை வணங்குபவர்கள் தனித்தனியானதும் அப்போதுதான். அப்போது முளைத்ததுதான் முதல் மதப்பிரிவுகளான சைவமும் வைணவமும். பிரிவினையின் தந்தையும் இந்த சைவ மற்றும் வைணவ மதத் தோற்றந்தான். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டைகள் உருவாக ஆரம்பித்தன. சில மன்னர்கள் சைவமதத்தைத் தழுவினார்கள், சிலர் வைணவத்தைத் தழுவினார்கள். நாடுகளுக்கிடையே வேறுபாடான மனப்பக்குவமும் சண்டை சச்சரவுகளும் வர ஆரம்பித்தது அங்கேதான்.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

2 பதில்கள்

  1. தனேஷ் /

    ஆரியப் படையெடுப்பு என்பது அடிப்படையற்ற வாதம்.அது பல தரப்பட்ட வாதத்திற்கு உட்பட்டது.சங்க இலக்கியம் முழுவதும் நமது கலாச்சாரம் இந்து கலாச்சாரமாகவே பேசப்படுகிறது. இந்து என்ற சொல் இல்லாவிடினும் அவை இந்து தர்மத்தை தான் பேசுகிறது. ஏதோ தமிழனின் அடையாளத்தை நாமே மாற்றிக்கொள்ளக்கூடாது.தமிழன் இந்து மதத்திற்கு அன்னியப்பட்டவன் அல்ல!யாரோ வந்து வேதங்களை நம்மீது திணித்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

  2. பாபு /

    தமிழன் இந்து என்பது அப்பட்டமான பொய் , ஆரியர்கள் நம் மீது திணித்தது , வேதம் என்பது உழைப்பை மறுப்பது, அது உழைப்பு என்று குறிப்பிடுவது அடுத்தவர்களை ஒழிப்பது மட்டுமே, நம் சித்தர்கள் அனைவரும் ஆரியத்தின் மூல வேர்களை எதிர்த்து போரடியவர்களே , இந்து மதத்திற்கு நேர எதிரானவர்களே நம் தமிழர்கள்

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>