தமிழா நம் தமிழ் சொல்லாததா? (1)

தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களில் சொல்லப்படாத அறிவியலும் இல்லை, தொழில் நுட்பங்களும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழர் கண்டுவைத்த, சொல்லிவைத்த கருத்துக்களைத்தான் இன்றைய தத்துவ அறிஞர்களும், அறிவியலாளர்களும் தாங்கள் கண்டுணர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறார்கள். நமக்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பாடங்கள் இந்தத் தலைமுறையில் இருக்கும், காசுக்காகப் பணியாற்றும் தமிழாசிரியர்களால் தெரிவு செய்யப்பட்டவை. எதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவைகளைப் பாடத்திட்டத்தில் வைக்காமல், செங்கீரைப்பருவம், பிள்ளைத்தமிழ், பிள்ளைக்கறி சமைத்த கதை, அகலிகையின் கதை, நளதமயந்தி கதை என ஒன்றுக்கும் உதவாத கதைகளையும் பாடங்களையும் வைத்து மாணவர்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் அறிவியலும் தொழில்நுட்பங்களும், மருத்துவமும் மற்றும், வாழ்வியலும் எடுத்துரைக்கப் பட்டிருக்கும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் மறைந்து போனது மட்டுமல்லாமல் ஆங்கிலம் படித்தால், பேசினால்தான் பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்குமென்ற நிலை இன்றைய கல்விக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் இன்றியமையாததுதான், ஆனால் அதற்காக தமிழ் மொழியைத் தடைசெய்யுமளவுக்கு விழிப்புணர்ச்சி நம்மிடம் அழிந்துபோயிருக்கிறது. இனிமேல் யாரேனும் தமிழ்ப்படித்து என்ன பயனென்று கேட்டால் முகத்தில் ஓங்கி அறைந்துவிடுங்கள்.

ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள இலக்கியங்களில் காதல் மட்டுமே விஞ்சி நிற்கும். ரோமொயோ, ஜூலியட் கதை போன்றவை இவைகளுக்கு எடுத்துக்காட்டுக்கள். நம் தமிழில்மட்டும்தான் 150 மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்ட ஒரே நூலான புறநானூறு, புவியில் மிகச்சிறப்புப் பெற்ற நூலான திருக்குறள், எட்டுப் பெண்களை மணந்த சூழ்நிலையும் மனஒழுக்கத்துடன் (காமுகனாக இன்றி) வாழ்ந்து நீதியாட்சி செய்து பின் துறவரமேற்று வாழ்வியலை விளங்கவைக்கும் மன்னன் கதையான சீவக சிந்தாமணி, நலன் உடமையின் – அழகுடைமையை விட நாணு – நாணமுடைமை என்று அழகைவிட நாணத்துடன் இருப்பதுதான் சிறப்பு விளங்கவைத்த முதுமொழிக்காஞ்சி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

சங்கத்தமிழ் நூல்கள்தான் இப்படியென்றால் அவைகளுக்குத் துணைபோக பாரதி, பாரதிதாசன், கல்கி உள்ளிட்ட சென்ற நூற்றாண்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் வாழ்வியலில் சொல்லாத கருத்துக்களே இல்லை.

ஒரு சொல்லாகட்டும், ஒரு சொற்றொடராகட்டும் தவறு நேர்ந்துவிட்டால் ஆங்கில மொழியைப் பிழையுடன் பேசுவதாகக் நையாண்டிசெய்யும் மனிதர் தன் தாய்மொழியில் ஒரு வாக்கியத்தையாவது தூய்மையான தமிழ்ச் சொற்களை வைத்துப் பேச முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைச் சொல்கிறேன். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற டார்வின் கொள்கையில் எவ்வளவுதூரம் உண்மையிருக்கிறதென்று ஆராய்ச்சி செய்ததில், முடிவுகள் அவரின் பரிணாமக்கொள்கையே தவறானதென்று உணர்த்தியிருக்கின்றன. ஆனால், தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறியிருக்கும் செய்தியைக் கேளுங்கள்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள்தாமே ஆறறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
ஒருசார் விலங்கும் உள என மொழிப

இந்தப்பாடலின் கருத்தைச் சுருக்கமாக விளக்க முயற்சிசெய்கிறேன். மனிதனுக்கு ஆறறிவு என்பதை அறிவோம். ஆனால் நம்மில் பலருக்கு ஆறறிவுகள் எவையெவை எனக்கேட்டால் திரு திருவென விழிப்போம்.

புவியில் முதலில் தோன்றிய உயிர்கள் தாவரங்கள். அவைகளுக்குத் தொடு உணர்வு மட்டுமே உண்டு. எந்தப்பிடிமானம் அருகில் கிடைக்கிறதோ அதைப்பிடித்துக் கொண்டு வளரக்கூடிய திறன் அவைகளுக்கு உண்டு.

இரண்டாவதாகத் தோன்றியவை அத்தாவரங்களைத் தின்று வாழக்கூடிய புழுக்கள் உருவாகின. அவைகள் தன் உணவின் சுவையை அறிந்துகொள்ளக் கூடிய சுவையறிவுத் திறன் அவைகளிடமிருந்தன.

இந்தப் புவியில் அடுத்த பரிமாணவளர்ச்சி காற்றில் மணத்தினை உணரக்கூடிய நுகர்தல் திறன் மூன்றாவது அறிவாக உருவெடுத்தது. புழுக்கள் பிறகு லார்வா, பியூப்பா என்ற வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் மலர்களில் உள்ள தேனைக் அருந்த அதன் மணத்தினை நுகர்ந்து பறக்க ஆரம்பித்தன. இவைகள்தான் தும்பி, பட்டம்பூச்சி போன்றவை. அப்பொழுதெல்லாம் இருந்த இவ்வகை உயிரினங்களுக்குக் கண்கள் இல்லாமல் இருந்திருக்கின்றன.

கண்கள் தோன்றி நான்காவது அறிவாகிய பார்வைத்திறன் பெற்று மலர்களின் அழகிய நிறங்களால் ஈர்க்கப்பட்டு இரைதேடிப் பறக்க ஆரம்பித்தன.

பிறகு ஐந்தாவது அறிவாகிய கேட்கும் திறன் உயிரினங்களுக்கு வர ஆரம்பித்தது. பிறகு விலங்கினங்களில் பல வளர்ச்சி நிலைகள், வகைகள் தோன்றின. மனிதன் தோன்றிய போது ஆறாவது அறிவாகிய மனம் பெற்றிருந்தான்.

நம்மில் பலருக்கு ஆறாவது அறிவு என்னவென்றால் பகுத்தறிவு என்றுதான் சொல்வோம். ஆனால் பகுத்தறிவானது மனம் என்ற ஆறாவது அறிவின் ஒரு பண்புதான். இப்படிப் பல பண்புகள் மனம் என்கிற ஆறாவது அறிவுக்கு உண்டு.

ஒவ்வொரு அறிவையும் ஆள ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொரு பூதமும் வரிசையாகத் துணைவருகிறது. தொட்டுணர்வதை நிலமும், சுவைப்பதை நீரும், நுகர்வதை காற்றும், காண்பதை நெருப்பும் மேலும் கேட்பதை ஆகாயமும்

ஆட்சிசெய்கின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என வரிசை கூட மாறாமல் நம் படித்திருப்போம். அப்போதே தமிழர்கள் எவ்வளவு அறிவுடன் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்பார்த்தால் இன்று நாம் திரைப்படங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதன் உண்மை விளங்கும். தமிழில் இவ்வளவு அறிவுசார்ச் செய்திகள் இருக்கையில் குப்பைகளைப் படித்துவிட்டு தமிழால் பயனில்லை, தமிழில் பேசாதே என்றால் சொல்பவரை மூடர் என்றும் கேட்பவரை முட்டாள்களென்றும் சொன்னால் என்ன தவறு.

தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கணக்கிடப்படமுடியாத பழைய காலம் என்பதை நாம் அறிவோம். இது வடமொழியில் வேதத்தைத் தொகுத்த வியாசமுனிவர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்ட காலம் என்றும், இசை நடனவிதிகளுக்கு மூலவராகக் கருதப்படும் பதஞ்சலிமுனிவர் காலத்தை ஒட்டி வாழ்ந்தவரகாகத் தொல்காப்பியர் கருதப்படுகிறார்.

மாணிக்கவாசகரும் இதே கருத்தைத் தெரிந்து பாடியிருக்கிறார்.

புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பொத்தாம் பொதுவான டார்வினின் அரைகுறைப் பரிணாமக் கொள்கை எங்கே? பழந்தமிழ்ச் சொல்லும் முலம் தெளிந்துணர்ந்த பரிணாமக் கொள்கை எங்கே… இனி யாராவது பரிணாமக் கொள்கையைக் (Theory of Evolution) கண்டவர் யாரென்றால் டார்வின் என்று சொல்லாதீர்கள்; எங்கள் தொல்காப்பியர் என்று சொல்லுங்கள்.

வரிசை மாறாமல் ஆறறிவும் (6 Senses) எவ்வளவு தெளிவாக தமிழர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பாழாய்ப்போன கடல் நம்மிலிருந்து இவைகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ அறிவியல் மற்றும் நுட்பச் செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கும்.

The following two tabs change content below.
கோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது!...

3 பதில்கள்

 1. Dr R Paramasivam /

  Dear Ganesh Kumar,

  It is interesting to read your postings. I really appreciate your findings of scientific knowledge in Tamil Classical Literature (May 29, 2012).

  Kindly try to understand that non-acceptance of the well established SCIENCE Theories will only help the flourishing of pseudo-sciences uplifted by religious groups and NOT the growth of Tamil Culture.

  Darwin's Theory of Evolution is not a half-baked one. The sects against it are proposing the Intelligent Design (ID) theory based on god's creation.

  The scientific facts like Pascal's law (you can not compress a liquid!) - Aivayar's poem about you can not compress the sea!, magnification of images by lens - Kambar's song about the image of a palm tree in a water drop! and Darwin's Theory - Tholkappiar's classifications of senses etc. and so many more are all express the universal scientific truths only but in different platforms, in different contexts and in different cultures with varying levels of understandings.

  The ancient Tamil Culture&Society was poisoned and eclipsed by the Aryan invasion (Bharministic) and currently controlled by the Corporates.

  The Real SCIENCE developed anywhere in any society becomes the knowledge wealth of entire humankind but the PSEUDOSCIENCE is advocated by some people (like the God-men) to command&control the majority of human population in worldwide.

  The TECHNOLOGY - (which is based on Science!) - belongs to a society or a country and plays a major role militarily to control the rest of the world.

  I kindly request you to have scientific approach in interpreting, analysing the scientific facts in Tamil literary works and connecting them with the real SCIENCE. This only will fulfill your ambition to serve the Tamil Culture.

  With kind regards,
  Dr R Paramasivam
  rpsivam08@gmail.com

 2. அய்யா... தங்கள் பார்வைக்கு எனது நன்றிகள்!...

  நான் உங்கள் கருத்துக்களையும் சுட்டிக்காட்டுதல்களையும் புரிந்துகொண்டேன்.... மேலும் அது தொடர்பாகப் படிக்கிறேன்...
  நன்றி

 3. அதற்கு முன்னர் சில சந்தேகங்கள்:

  1. ////Kindly try to understand that non-acceptance of the well established SCIENCE Theories will only help the flourishing of pseudo-sciences uplifted by religious groups and NOT the growth of Tamil Culture.////

  Well established science theories - எல்லாமே வளர்ச்சிநிலையில்தானே இருக்கின்றன... கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், மற்றும் அதன் மூலம் பழையவைகளை உடைத்தெரிதல் போன்றவை நடந்துகொண்டுதானே இருக்கின்றன... வெல் எஸ்டாபிலிஷ்டு என்று எப்படிநாம் சொல்லமுடியும்?

  2. /// Darwin’s Theory of Evolution is not a half-baked one. The sects against it are proposing the Intelligent Design (ID) theory based on god’s creation.////

  இருக்கலாம்.... ஆனால் மாற்றுக்கருத்துகள் அனைத்துமே கற்பனையால் அல்லது சிந்தித்து உருவாக்கப்பட்டவை என்று தாங்கள் சொல்வது எதை வைத்து என்று புரியவில்லை!... ஆறறிவின் வளர்ச்சிநிலைகளையும் ஆறறிவின் ஆதாரமான ஐம்பூதங்களையும் வைத்துத்தான் வளர்ச்சிநிலைகள் அறியப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

  /// The ancient Tamil Culture&Society was poisoned and eclipsed by the Aryan invasion (Bharministic) and currently controlled by the Corporates.///

  இப்படியே எத்துனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை!... அப்போ தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.. நான் ஒரு கணினிப் பொறியாளன்... எனக்கு தனிப்பட்ட தமிழார்வத்தினால் படித்து அறிந்துகொள்கிறேன்... தமிழறிஞர்கள் இப்போதெல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே... அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து தமிழின் பழமைச்சிறப்பை மீட்டெடுக்கலாமே.... சொல்லிவிட்டுப் போவதில் நம் கதை முடிந்துவிடுகிறது!... ஆரியர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், கார்ப்பரேட்டுகள், சீனர்கள் என்று வருபவர் வரட்டும்.... சிதைப்பதைச் சிதைக்கட்டும் நமக்கு நம் வயிற்றுப்பாடே பெரிதாகிப் போனதுதான் காரணமென்கிறேன்... யார் வருவார்கள் பேச்சாக இல்லாமல் செயலில் காட்ட?

  The Real SCIENCE developed anywhere in any society becomes the knowledge wealth of entire humankind but the PSEUDOSCIENCE is advocated by some people (like the God-men) to command&control the majority of human population in worldwide.////

  ஆங்கில மருத்துவம் சாதிக்காத சில இடங்களில் சித்தர்கள் மருத்துவம் செய்திருக்கிறதே... அவர்கள் சொன்ன பாடல்கள் சொல்லும் மூலிகைகள் மருந்தாக நிறையபேருக்குப் பயன்பட்டிருக்கிறதே... அவ்ர்களும் God-men என்று சொல்கிறீர்களா? கடவுள் என்பதை இவர்கள் ஒரு மேடையாக்கிக்கொண்டு சூத்திரங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றே அறிகிறேன்...
  நாட்கணக்குகள், அளவீடுகள், வாழ்க்கைச் சூத்திரங்கள் எல்லாம் நிறைய உண்டு தமிழிலக்கியத்தில்... இதெல்லாம் இப்போதிருக்கும் WELL-STANDARDISED அளவீடுகளைவிடச் சிறந்த கணக்கீடுகளாகத் தெரிகின்றன நமக்கு!... ஆனால் மேலைமொழிகளின் ஆதிக்கத்தாலேயே அடிபட்டுப் போயின இதுவே உண்மையென்கிறேன்... உங்கள் கருத்தென்ன?

  ஆனால் மேலும் அறிந்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது...
  சந்திப்போம்...

  கோடான கோடி நன்றிகள்!...

பதிலிட

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>